உள்ளூர் செய்திகள்

‘அமெரிக்கன் காலேஜ் டெஸ்ட்’

அமெரிக்காவில் உயர்கல்வி பெற திட்டமிடும் மாணவர்கள், ஏ.சி.டி., எனப்படும் ‘அமெரிக்கன் காலேஜ் டெஸ்ட்’ எழுவதன் மூலம் வாய்ப்புகளை பிரகாசமாக்கிக்கொள்ள முடியும்! அமெரிக்காவின் தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வாக கருதப்படும் ஏ.சி.டி., தேர்வு மதிப்பெண்கள், கனடா மற்றும் அமெரிக்கா கல்வி நிறுவனங்களில், நான்கு ஆண்டுகள் கொண்ட பி.இ., பி.ஏ., பி.எஸ்., பி.ஏ.எஸ்., போன்ற இளநிலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது. மேலும், ஆங்கில புலமையோடு கணிதம் மற்றும் அறிவியல் திறனை பரிசோதிக்க விரும்பும் பலரும் இத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு விபரம் ஆன்லைன் வழியில் நடைபெறும் இத்தேர்வில், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கட்டுரை எழுதுதல் மற்றும் வாசித்தல் போன்ற ஐந்து பகுதிகளில் மாணவர்களின் பகுப்பாய்வு திறன்கள் பரிசோதிக்கப்படுகின்றன. ஆங்கிலம்: ’மல்டிபில் சாய்ஸ்’ அடிப்படையில் 75 கேள்விகள் கேட்கப்படும். ஆங்கில மொழியில் வாக்கியங்களை இலக்கண பிழையின்றி அமைக்கும் திறன், சொல் திறன், எழுத்தறிவு திறன்கள் ஆகியவை மதிப்பீடு செய்யப்படுகின்றன. கால அளவு: 45 நிமிடங்கள் கணிதம்: 60 கேள்விகள் கொண்ட இப்பகுதியில், சிக்கலை தீர்க்கும் பகுப்பாய்வு திறன், கணக்கீட்டு திறன் மற்றும் அடிப்படை கணித்த திறன் ஆகியவை சோதிக்கப்படுகிறது. கால அளவு: 60 நிமிடங்கள் அறிவியல்: இன்டர்பிரிடேஷன், அனலைசஸ், எவாலுவேஷன், ரீசனிங் மற்றும் பிராப்ளம் சால்விங் போன்ற திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது. கால அளவு: 35 நிமிடங்கள் வாசித்தல்: 40 ’மல்டிபில் சாயிஸ்’ கேள்விகள் கேட்கப்படும் இப்பகுதியில், ஆங்கில மொழி வாசிப்பில், மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறன் சோதிக்கப்படுகிறது. கால அளவு: 35 நிமிடங்கள் கட்டுரை எழுதுதல்: உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி (என்டரி லெவல்) அளவிலான ஆங்கில மொழி எழுதும் திறன்களை மதிப்பீடு செய்யப்படுகிறது. கால அளவு: 40 நிமிடங்கள் தகுதி: 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் எவரும், எந்த வயதினரும் இத்தேர்வை எழுதலாம். விபரங்களுக்கு: www.actstudent.org


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !