உள்ளூர் செய்திகள்

குறைபாடுகளை களையும் படிப்புகள்!

கேட்டல் மற்றும் பேசும் திறனில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை கற்றுத் தரும் ஓர் சிறந்த கல்வி நிறுவனம், ‘ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்பீச் அண்ட் ஹியரிங்’!  வளாகம் மற்றும் உட்கட்டமைப்புமைசூரில், மத்திய அரசின் கீழ் தன்னாட்சி கல்வி நிறுவனமாக செயல்பட்டுவரும் இக்கல்வி நிறுவனத்தில், மல்டி மீடியா வசதி கொண்ட 22 வகுப்பறைகள், 180 பேர் அமரக் கூடிய ஒரு செமினார் ஹால், 400 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு ஆடிட்டோரியம், டிப்ளமோ இன் ஹியரிங் லெகுவேஜ் ஸ்பீச் (டி.எச்.எல்.எஸ்.,) படிப்புக்கான ஆடியோ மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதியுடன் ஏழு மையங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. சான்றிதழ் படிப்பு - வளர்ச்சியில் குறைபாடுள்ள குழந்தைகள் பராமரிப்பு: 12 வாரங்கள் கொண்ட இப்படிப்பில், குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். டிப்ளமா படிப்புகள்டிப்ளமா இன் ஹியரிங் எய்டு அண்ட் இயர் மோல்டு டெக்னாலஜி: ஓர் ஆண்டு கொண்ட இப்படிப்பில், காது கேட்டும் கருவிகளை சரிசெய்வது மற்றும் அதை பராமரிக்கும் முறைகளை பற்றிய தொழிற் பயிற்சிகள் அளிப்படுகின்றன. இப்படிப்பில் உள்ள 25 இடங்கள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், ’மெரீட்’ முறையில் நிரப்பப்படுகிறது. டிப்ளமா இன் ஹியரிங், லேங்குவேஜ் அண்ட் ஸ்பீச்: கேட்டல், மொழித்திறன் மற்றும் பேசும் திறன் போன்றவற்றில் குறைபாடுள்ளவர்களுக்கு உதவும் மனிதவளத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இளநிலை படிப்புகள்பாச்சுலர் ஆப் ஆடியாலஜி அண்ட் ஸ்பீச் லாங்குவேஜ் பெத்தாலஜி (பி.ஏஎஸ்எல்பி.,): கேட்டல் மற்றும் பேசும் மொழித் திறனில் உள்ள குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள், உடல் நிலையை மதிப்பீடு செய்யும் முறைகள் மற்றும் தொடர்பு குறைபாடுகள் மேலாண்மை போன்றவை இப்படிப்பில், கற்றுத் தரப்படுகின்றன. 3 ஆண்டுகள் வகுப்பறை கல்வி மற்றும் ஓர் ஆண்டு இன்டர்ன்ஷிப் என மொத்தம் 4 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அகில இந்திய நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக படித்து, தேர்ச்சி பெற்றவர்கள், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு, முதல் 3 ஆண்டுகளுக்கு, மாதம் 800 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், வடகிழக்கு மாநிலங்களில் இன்டர்ன்ஷிப்பை தொடரும் மாணவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாயும், மற்ற மாநிலங்களில் இன்டர்ன்ஷிப்பை தொடரும் மாணவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. பாச்சுலர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மென்ட்): ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில், 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இந்த சிறப்பு கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதுநிலை டிப்ளமா படிப்புகள்பி.ஜி. டிப்ளமா இன் கிளினிக்கல் லிங்குஷ்டிக்ஸ் பார் ஸ்பீச் அண்ட் லேங்குவேஜ் பெத்தலாஜி: மொழி நோயியல், மொழியியல், மருத்துவ உளவியல் மற்றும் மருத்துவக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை ஒன்றிணைக்கும் முதுநிலை பட்டயப்படிப்பு. பி.எஸ்சி., (ஸ்பீச் அண்ட் ஹியரிங்) அல்லது பி.ஏஎஸ்எல்பி., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். பி.ஜி. டிப்ளமா இன் பாரின்ஷிக் ஸ்பீச் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி: பேச்சு பண்புகளின் மூலம் தனிநபர்களை அடையாளப்படுத்தும் முறைகள் பற்றி படிக்கும் படிப்பு. பி.எஸ்சி., -ஸ்பீச் அண்ட் ஹியரிங், பி.ஏஎஸ்எல்பி., பி.எஸ்சி., -கணிதம், இயற்பியல், எலட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தடய அறிவியல், பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ்., போன்ற ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை பட்டப்படிப்புகள்எம்.எஸ்சி., - ஆடியாலஜி:  ஒலியின் தன்மைகளை பற்றி விரிவாக படிக்கும் படிப்பு. ஒலியியல் வேறுபாட்டை கண்டறிதல் மற்றும் ஒலியியல் முறையின் சாதாரண அம்சங்களைப் பற்றின விரிவான தகவல்களும் இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. பி.எஸ்சி., -ஸ்பீச் அண்ட் ஹியரிங் அல்லது பி.ஏஎஸ்எல்பி., படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உதவித்தொகையாக மாதம் ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி.,- ஸ்பீச் அண்ட் லாங்குவேஜ் பெத்தாலஜி: கேட்டல் மற்றும் பேச்சுத்திறனில் குறைபாடுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவர்களை பராமரிக்கும் மற்றும் நோய் தாக்கத்தை கண்டறியும் முறைகள் உள்ளிட்டவற்றை ஆழமாக, தொழில்நுட்ப அறிவியல் மூலம் கற்றுத்தரக் கூடிய சிறந்த படிப்பு. பி.எஸ்சி., -ஸ்பீச் அண்ட் ஹியரிங் அல்லது பி.ஏஎஸ்எல்பி., இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்படிப்புக்கும் விண்ணப்பிக்க முடியும். இட ஓதுக்கீடு அடிப்படையில் 36 மாணவர் இடங்கள், நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பபடுகிறது. உதவித்தொகையாக மாதம் ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்படுகிறது. மாஸ்டர் ஆப் எஜுகேஷன் - ஸ்பெஷல் எஜுகேஷன் (ஹியரிங் இம்பயர்மெண்ட்): கேட்டல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, கல்வி கற்பிக்கும் முறைகள் பற்றி விரிவாக இப்படிப்பில் படிக்கலாம். இளநிலை சிறப்பு ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 50 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. மொத்தம் உள்ள 20 மாணவர் இடங்கள், ’மெரீட்’ முறையில் நிரப்பப்படுகிறது. ஆராய்ச்சி படிப்புகள்ஸ்பீச் அண்ட்  லாங்குவேஜ் பெத்தாலஜி மற்றும் ஆடியாலஜி துறைகளில் பிஎச்.டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. எம்.எஸ்சி.,-ஆடியாலஜி / எம்.எஸ்சி., -ஸ்பீச்  அண்ட்  லாங்குவேஜ் பெத்தாலஜி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி., படிப்புகள் தவிர, போஸ்ட் டாக்டோரல் படிப்புகளும் இக்கல்வி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு: www.aiishmysore.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !