எஸ்.இ.ஒ., அனலிஸ்ட்
‘கூகுள்’, ‘யாஹூ’ போன்ற ஆன்லைன் சர்ச் இன்ஜின்களில் இருக்கும் விவரங்களை முறைப்படுத்துவதும், எளிமைப்படுத்துவதும் மற்றும் மேம்படுத்துவதும், பணிகளுக்கு பெயர், எஸ்.இ.ஓ., எனும் ‘சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்’! இன்று நாம் வாழும் இந்த இன்டர்நெட் யுகத்தில் நம்மைச் சுற்றிலும் தகவல்கள் கோடி கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. அத்தகைய தகவல்கள் குறிப்பிட்ட ஒரு தகவல் பலரையும் எளிதாக சென்றடையும் வகையில், முறைப்படுத்தி தருவதே ‘சர்ச் இன்ஜின் ஆப்டிமைசேஷன்’ நிபுணரின் பிரதான பணி. முன்பெல்லாம் ‘வெப் டெவலப்பர்’களே இத்தகைய பணியையும் செய்து வந்த நிலையில், இப்போது ‘கூகுள்’ போன்ற சர்ச் இன்ஜின்கள், தங்களது வழிமுறைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதால் இதைக் கையாள, கைதேர்ந்த நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தைப் பற்றிய விவரத்தையோ அல்லது அதன் விளம்பரத்தையோ இண்டர்நெட்டில் பதிவேற்றும் போது, அங்கே குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான தகவல்களில், ஏதோ ஒரு மூலையில் அந்தத் தகவல் காணாமல் போய்விடு. அப்படி அது தொலைந்து போகாமல் சரியான பார்வையாளரைச் சென்றடைய தேவையான ‘கீவார்ட்ஸ்’, ‘ரன்னிங் பெயிட்’, ‘ஆர்கானிக் மார்கெட்டிங் கேம்பெய்ன்’ போன்ற முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது. இத்தகைய பணிகளை மேற்கொள்பவர் தான் ‘எஸ்.இ.ஒ., அனலிஸ்ட்’! வேலை வாய்ப்புஎஸ்.இ.ஓ., வேலையைப் பொருத்தவரை, பகுதி நேரமோ, முழு நேரமோ அல்லது சொந்தமாகவோ பணி புரியும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமானது, இந்த ‘எஸ்.இ.ஓ.,’ என்று தெரியவந்துள்ளது. இன்டர்நெட் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வரும் இன்றைய சூழலில் டிஜிட்டல் முறையில் மார்க்கெட்டிங் செய்யும் அனைத்துத் துறை நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தகுதிகள்எஸ்.இ.ஓ., அனலிஸ்ட் ஆக குறிப்பிட்ட பட்டம் ஏதேனும் பெற்றிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தொழில்நுட்ப ரீதியான கல்வியுடன் எஸ்.இ.ஓ., குறித்த திறன் பெற்றிருந்தால் போதும். அதாவது, படைப்பாற்றல், புதிய தொழில்நுட்பங்களை கற்கும் ஆர்வம், பகுத்தாராயும் திறன் போன்றவையே இந்தத் துறைக்கு மிகவும் அவசியமானவை. இந்த திறன்கள் இருந்தால், யார் வேண்டுமென்றாலும், எஸ்.இ.ஓ., முறையை வேகமாகக் கற்று வல்லுநர் ஆகலாம். கூடுதல் சான்றிதழ்கூகுள் அனலிடிக்ஸ், வெப் மாஸ்டர், சோஷியல் மீடியா அனலிடிக்ஸ் போன்ற ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்ளலாம். கூகுளின் ஏட்வார்ட்ஸ் மற்றும் அனலிடிக்ஸ் சான்றிதழ் பெறலாம். யூடெமி நடத்தும் முழுமையான எஸ்.இ.ஓ., பயிற்சிகளை பெறுவதும் உகந்தது!