நாட்டுப்புறவியல் கல்வி
உள்நாட்டிலும், மேற்கத்திய நாடுகளிலும் ஆய்வாளர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள் போன்ற வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது, நாட்டுப்புறவியல் படிப்பு! முக்கியத்துவம்:தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று நாட்டுப்புற இலக்கியம்! மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு, நம்பிக்கை, வாய்மொழி, வரலாறு மற்றும் பாடல்கள் ஆகியவை குறித்து ஆராய்ந்து வகைப்படுத்துவதே, நாட்டுப்புறவியல் கல்வித் துறை! ஆங்கிலத்தில் இதை FOLKLORE என்பார்கள். நாட்டுப்புற பண்பாடு, நாட்டுப்புற மருத்துவம், கட்டடக்கலை உட்பட பல அம்சங்களையும் உள்ளடக்கி, இன்றைய நாட்டுப்புறவியல் ஆராய்ச்சிகள் பெரிதும் விரிவடைந்துள்ளன. நாட்டுப்புறவியல் தொடர்புடைய பலவற்றையும் மாணவர்களுக்குக் கற்பிப்பதன் வழியாக இக்கால தலைமுறையினரிடத்தில் மரபு தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டு வருவதோடு, நாட்டுப்புற மக்களின் வாழ்வியலை ஆராய்வதால், அவர்களது வாழ்க்கை முறையும் மேம்படும் என்பதே உண்மை. உலகளாவிய நிலையில் நாட்டுப்புறவியல், இந்திய அளவில் நாட்டுப்புறவியல், தமிழக அளவில் நாட்டுப்புறவியல் ஆகிய வரலாறுகளும் காலப் பகுப்பு பண்புகளும் இத்துறை மாணவர்களுக்கு கற்றுத் தர படுகிறது. ஓலைச் சுவடிகளில் இருந்தும், வாய்மொழி நாட்டுப்புறப் பாடல்களில் இருந்தும் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மறைந்து தொலைந்து போன பல உண்மைகள் மீண்டும் நமக்குக் கிடைக்க பெறும். வேலை வாய்ப்பு:கடந்த சில ஆண்டுகளாக யுனெஸ்கோ அமைப்பு பழங்கால கலை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது. நாட்டுப்புற மக்களின் விவசாயம் மற்றும் மருத்துவம் ஆகியவற்றிற்கு சர்வதேச முக்கியத்துவமும் வழங்கி வருகிறது. இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட இத்துறை சார்ந்த கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் தேவைப் படுகிறார்கள். அதுமட்டுமின்றி, திரைத் துறை மற்றும் ஆவணப்பட இயக்குநர்கள் ஆவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. நாட்டுப்புறக் கலைகளில் முறையான ஆய்வு மேற்கொள்பவர்கள், பேராசிரியர்களாகவும் வேலைவாய்ப்பை பெற முடியும். மேலும், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களிலும், பண்பாட்டு ஆய்வு துறையிலும் பணி புரியலாம். நாட்டுப்புறவியல் துறைக்கெனவே பிரத்தியேகமான பல பருவ இதழ்கள் உள்ளன. அவற்றிலும் ஆராய்ச்சி தொடர்களை வெளியிடலாம். படிப்பு நிலைகள்: இளநிலை பட்டம், முதுநிலை பட்டம், எம்.பில்., - பிஎச்.டி., மற்றும் டிப்ளமா. முக்கிய கல்வி நிறுவனங்கள்:நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டைகாமராஜர் பல்கலைக்கழகம், மதுரைதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்