உள்ளூர் செய்திகள்

‘திறன்சார் பல்கலைக்கழகம் உருவாக்குவதே நோக்கம்’

கல்வியில் மாணவர்கள் ஆர்வம் காட்ட சுற்றுச்சூழலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 150 ஏக்கர் பரப்பளவில், 25 ஆயிரம் மரங்களுடன், இதமான சுற்றுச்சூழலில் எங்கள் கல்வி நிறுவனம் அமைந்துள்ளதால், மாணவர்கள் முதலில் கல்வி மீதான ஆர்வம் அதிகரித்து, புத்துணர்வு பெறுகின்றனர்! கல்லூரி ஆரம்பித்து 9 ஆண்டுகளுக்குள்ளாக, என்.பி.ஏ., நாக் ‘ஏ’ கிரேடு, ஐ.எஸ்.ஓ., ஆகிய அங்கீகாரங்களை பெற்றுள்ளோம். புதிய ஆராய்ச்சி திட்டத்திற்கான காப்புரிமை பதிவு செய்வதில் மட்டுமின்றி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவதிலும், இந்திய கல்வி நிறுவனங்களிலேயே 7ம் இடத்தில் உள்ளோம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும், இந்திய கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எப்., எனும் தரவரசை பட்டியலில் 200 கல்வி நிறுவனங்களுக்குள் இடம் பெற்றுள்ளோம். தேர்ச்சி விகிதத்திலும் 31வது இடத்தை பிடித்துள்ளோம். இவ்வாறு, தேர்ச்சி மட்டுமின்றி பல்வேறு இதர செயல்பாடுகளிலும் எங்கள் நிறுவனம் முக்கிய இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன்களைப் பெற்றவர்களாக மாணவர்களை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 4 தொழில் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்களில் 70 சதவீதம் பேர் பிஎச்.டி., பின்புலத்தில் இருப்பதால், ஆராய்ச்சி ரீதியான கண்ணோட்டத்தில் அணுகுகிறோம். அதனால், மாணவர்களிடமும் ஆராய்ச்சி செய்யும் ஆர்வம் தூண்டப்படுகிறது. எங்கள் கல்லூரியில், ஆசிரியர் மாணவர்களுடனான சுமூகமான இணக்கம், மிகப் பெறும் வெற்றியைத் தருகிறது. வகுப்பறையில் கற்பித்தலைவிட, கற்றலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கற்றலில் மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்ட பேராசிரியர்கள் திறம்பட செயல்பட வேண்டியது அவசியம். இதை உணர்ந்தே, பேராசிரியர்களுக்கு 8 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கிறோம்.  ஒரு பாடத்தை எவ்வாறு எளிதாக கற்பது, தேர்வை எவ்வாறு எளிதாக அணுகுவது போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கும் அளிக்கிறோம். ஸ்கில் டெவலப்மெண்ட், புராஜக்ட் லேர்னிங் மற்றும் செயல்முறை பயிற்சிகள் போன்ற செயல்பாடுகளால், எங்கள் கல்லூரியில் அனைத்து வகையிலும், கற்றல் என்பது ஆர்வமாக நடைபெறுகிறது. இவைதவிர, சர்வதேச பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்களுடன் வெபினார், ஸ்கைப் மூலமாகவும் சில படிப்புகளை வழங்குகிறோம். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கத்துடனும், வித்தியாசத்துடனும் செய்வதால், கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட இந்த குறுகிய காலத்திலேயே பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளோம். எதிர்கால திட்டம்மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் பெறுவது மற்றும் சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் அமைப்பது போன்றவை அடுத்தகட்ட இலக்காக வைத்துள்ளோம். எனினும், இக்கல்வி நிறுவனத்தை எதிர்காலத்தில், ‘திறன்சார் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்’ என்பதே எங்களது பிரதான நோக்கம்! -கே.பொம்மனராஜா, முதல்வர், கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !