உள்ளூர் செய்திகள்

எது சிறந்த விவாதம்?

ஒரு விவாதத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதை முன்கூட்டியே அறிந்துக்கொள்ளக்கூடிய பிரத்யேக வழிமுறையை, அமெரிக்காவின் நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்! ‘எந்த ஒரு அர்த்தமுள்ள விவாதத்திற்கும், மொழியியல் பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல்களை காட்சிப்படுத்துதல் ஆகியவை மிக அவசியமாகும்.   விவாதம் என்பது இந்த உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை கண்டறிந்து தரும் வகையில் அமைய வேண்டும் என்றும், விவாதத்தில் பங்கேற்பவர், அவர் ஏற்கனவே அறிந்துள்ள தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு விவாதத்தில் பங்கேற்காமல்,  ஒரு பிரச்சனைக்கு புதிய சிந்தனையின் மூலம் தீர்வு காண முயல வேண்டும்’ என்றும் ஆராய்ச்சியாளர் மற்றும் துணை பேராசிரியரான நிக் தெரிவித்துள்ளார்.   மேலும், சில நுட்பங்களின் அடிப்படையில் விவாதத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதை 74 சதவீதம் அளவிற்கு முன்கூட்டியே கணிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !