ஈடுபாடு இருந்தால் எந்த துறையிலும் சாதிக்கலாம்
கல்லூரி மாணவர்கள் 'புராஜெக்ட்’ செய்வது என்பது அவசியமான ஒன்று. அதன்மூலம், மாணவர்களது அறிவு விருத்தியடைகிறது. பெரும்பாலான மாணவர்கள், சொந்த பணத்தை செலவு செய்தே 'புராஜெக்ட்’ செய்ய வேண்டியுள்ளது. ஆனால், எங்களது கல்லூரியில் படிக்கும் மாணவர்களது 'புராஜெக்ட்’ திட்டங்கள் மத்திய அரசின் குழுவால் ஆராயப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு 'புராஜெக்ட்’க்கும் 2.5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது. பொதுவாக, 4.5 கோடி ரூபாய் வரை மத்திய அரசின் அமைப்புகள் கல்லூரிகளுக்கு நிதியுதவி வழங்கும். ஆனால், எங்களது கல்லூரிக்கு 15 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு அளிக்கிறது. இதன்வாயிலாக, மாணவர்களது புத்தாக்க சிந்தனைகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம், அவர்களை வரும்காலத்தில் தொழில் முனைவோர் ஆக சாதிக்க தூண்டுதலாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசின் ’மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்களால், அதிகமான தொழில்முனைவோர்கள் உருவாவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.மத்திய மனிதவள அமைச்சகம் மற்றும் டிபார்ட்மெண்ட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை நேரு கல்லூரியில் செயல்படும் பயோடெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய மூன்று துறைகளுக்கு 'ஸ்டார்’ அங்கீகாரத்தை வழங்கி கவுரவித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.திடீர் மாற்றம்!சமீபகாலமாக, அண்ணா பல்கலைக்கழகம் சில அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. இவை வரவேற்கத்தக்கது என்றபோதிலும், தேர்வு திருத்தமுறைகளில் கொண்டுவரப்படும் சில திடீர் மாற்றங்களை மாணவர்களால் உடனடியாக கிரகித்துக்கொள்ள முடிவதில்லை. உதாரணமாக, இதுவரை 3 மதிப்பெண் வினாக்களுக்கு தயாராகி வந்த மாணவர்களால், அதே பாடம் திடீரெனெ 16 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்போது, அவர்களால் உடனடியாக அதற்கு ஏற்ப தயாராக முடிவதில்லை. மாற்றம் நிச்சியமாக அவசியம். ஆனால், அவை அனைவராலும், முழுமையாக உணர்ந்திருக்கப்பட வேண்டும். திடீரென கொண்டுவரப்படும் மாற்றங்களை, மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, எந்த ஒரு மாற்றமும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகங்கள் ஆகியவற்றின் விழிப்புணர்வோடு அமல்படுத்தப்பட வேண்டும். ஒர் இரவில் கொண்டுவரப்படும் மாற்றம் நிச்சயம் எதிர்பார்க்கும் பலனை தராது.குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 30 சதவீத மாணவர்கள் மட்டுமே நகரத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் கிரமப்புறத்தில் வரும் மாணவர்கள் என்ற நிலையில், அவர்களால், திடீரென கொண்டுவரப்படும் கடுமையான தேர்வு திருத்த முறையின்கீழ் தேர்ச்சி பெறுவது கடினமாக அமைகிறது. இதனால், மாணவர்கள் நிகர்நிலை கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய தூண்டுதலாக அமைந்துவிடவும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் ஒரு படிப்பை தேர்வு செய்கிறார்கள் என்பதால், நாமும் அதே படிப்பை தேர்வு செய்யக்கூடாது. எந்த ஒரு படிப்பையும் ஆராய்ந்து அறிந்து தேர்வு செய்ய வேண்டும். கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் என எந்தப் படிப்பாக இருந்தாலும், அதில் முழு ஆர்வம் இருந்தால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் முடிவில் இறுதிவரை உறுதியாக இருப்பதும் அவசியம். ஒரு படிப்பை தேர்வு செய்துவிட்டு, இடையில் மாற்றுவது என்பது வரவேற்கத்தக்கதல்ல. எந்த ஒரு படிப்பையும் அதீத ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் படித்தால், அது எந்த துறையாக இருந்தாலும் சாதனை படைக்க முடியும்!-கிருஷ்ணகுமார், செயலர், நேரு கல்வி குழுமங்கள், கோவை