பல்துறை திறன் வளர்ப்பே வெற்றிக்கு அடிப்படை
மதிப்பெண் சார்ந்த கல்வியை விட, மதிப்போடு வாழ்வதற்கான கல்வியை அளிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். வகுப்பறையில் வாங்கும் மதிப்பெண்களை விட, வெளியுலகில் குழந்தைகள் சந்திக்க வேண்டிய வெற்றிகள் நிறைய உள்ளன. அதற்காக குழந்தைகளை தயார்படுத்துவது சாதாரண காரியம் இல்லை.முதலில் மாணவர்களின், ‘பெர்னாலிட்டி’யை மேம்படுத்த வேண்டும். கம்யூனிகேஷன், மொழித்திறனை அதிகரிக்க வேண்டும். இதை புகுத்தினாலே, குழந்தைகள் தனக்கான அடையாளத்தை தேர்வு செய்து, அதை அடைய தீவிரமாக முனைப்போடு செயல்படுவர். அதிக மதிப்பெண்ணும் தானாக எடுக்க முயற்சி செய்வர்.அந்தவகையில், எங்கள் பள்ளியில் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மொழிகளுக்கு தனித்தனியாக முன்னுரிமை தருகிறோம். சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில், சனிக்கிழமை தோறும் புத்தகங்களுக்கு, ‘லீவு’ அளித்துவிடுகிறோம். அன்று நாள்முழுக்க சுயமுன்னேற்ற கருத்தரங்கு, பன்முகப்போட்டிகள், நாடகம், பட்டிமன்றம் என, வாழ்வியல் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளை மாணவர்களையே திட்டமிட்டு நடத்த செய்வோம். இதன்மூலம் மாணவர்களின் தலைமைப்பண்பு அதிகரிக்கிறது.தவிர, ஒவ்வொரு துறையிலும் முக்கிய நபர்களை அழைத்து பேச வைப்போம். மொத்தம், 50 ஆசிரியர்கள் இங்குள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு உடனே, தொடர்ந்து 18 வருடமாக, நுாறு சதவீத தேர்ச்சி பெற்று வருகிறோம். சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடந்தாண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். மனதளவிலும், உடலளவிலும் மாணவர்களை வலிமை மிக்கவராக மாற்றுகிறோம். குழந்தைகளை எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை.தினமும் ஒரு மணி நேரம் விளையாடவிடுவோம். டென்னிஸ், டேக்வோண்டா பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. வெஸ்டர்ன் மற்றும் பாரம்பரிய நடனம், பாட்டு பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறோம். யோகா, தியான வகுப்புகளும் உள்ளன. மேலும், ‘ஜார்னலிசம்’ மற்றும் ‘போட்டோகிராபி’ பயிற்சியும் உண்டு.வரும் ஆண்டுகளில், வெளியுலக அனுபவத்தை கற்றுத்தர வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிருந்து மாணவர்கள் வரவழைத்தும், இங்குள்ள மாணவர்கள அங்கு அழைத்து சென்றும் பரஸ்பரம் அனுபவங்களை பகிர வைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம். தமிழ்நாடு அளவில், ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ்’ சேனல் நடத்திய ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் எங்கள் பள்ளி இரண்டாமிடம் பிடித்ததும் குறிப்பிட்டத்தக்கது.மாணவர்கள், எதிர்காலத்தில் மருத்துவராக, பொறியாளராக, பொதுநலவாதியாக, தொழில் அதிபராக சமூகத்தில் உயர்ந்த பொறுப்பு வகிக்கும் போது, தலைமைப் பண்பு உட்பட பல்வேறு திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே பல்வேறு திறன் வளர்ப்பில் ஊக்கப்படுத்துகிறோம். இவையே எங்கள் சிறப்பு!–ஹரிகிருஷ்ணன், இயக்குனர், பிளாட்டோஸ் அகாடமி பள்ளி, திருப்பூர்.