மாணவர்களிடம் தன்னம்பிக்கையை விதைக்கிறோம்
கலை அறிவியல், மேலாண்மை, பாலிடெக்னிக் ஆகிய மூன்று கல்வி நிறுவனங்கள் வாயிலாக, இன்றைய சமுதாய தேவைக்கேட்ப பல்வேறு படிப்புகளை வழங்கிவருகிறோம். அனைத்து படிப்புகளையும் தரமாக வழங்குவதையே நோக்கமாகக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் இந்த கல்வி நிறுவனங்களை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். எங்கள் கல்லூரியில் மாணவிகளுக்கு முழு பாதுகாப்பு உண்டு; தற்போது கல்வி கற்போரில் 60 சதவீதம் பேர் மாணவிகள், 40 சதவீதம் பேர் மாணவர்கள். ’வுமன் எம்பவர்மெண்ட் செல்’ ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் பெண்களுக்கு தையற்கலை, அலகுக்கலை உட்பட பல்வேறு சுயதொழில் பயிற்சிகளையும் அளித்துவருகிறோம். காது கேளாதோர் மற்றும் பேச இயலதோர் 50 பேருக்கு, எங்கள் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அளித்து வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வாயிலாகவும் மாணவர்களுக்கு கற்பிக்கிறோம். 'டிஜிட்டல் கேம்பஸ்’ எனும் தொழில்நுட்பம் வாயிலாக, மாணவர்கள் கல்லூரி முடித்து அவர்களது சென்றபிறகும், ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற முடியும். அதிக மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமல்லாமல், இதர திறன் வளர்ப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில், அனைத்து மாணவர்களிடம் தன்னம்பிக்கை மிக அதிகமாக தேவைப்படுகிறது. அவ்வாறு மாணவர்களிடம் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், சிலபஸ் மட்டும் கற்பிக்காமால், இதர திறன் வளர்ப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். கல்வி திட்டத்தில், 80 சதவீதம் திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் தருகிறோம். குறிப்பாக, வணிகவியல் மாணவர்களுக்கு 'டேலி’, கேட்டரிங் மாணவர்களுக்கு ’கார்விங்’, மேனேஜ்மெண்ட் மாணவர்களுக்கு 'லைவ் கேஸ் ஸ்டடீஸ்’ உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கல்லூரியில் சேர்ந்த உடனே அனைத்து மாணவர்களுக்கும் தொடர்பியல் திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிக்க துவங்குகிறோம். 'இண்டர்வியூ’வை எப்படி எதிர்கொள்ளும் விதம் குறித்த பயிற்சியையும், மூன்று ஆண்டுகளில் வழங்குகிறோம். கவனச் சிதறல்இன்றைய மாணவர்களிடம் கவன சிதறல் அதிகமாக உள்ளது. அவற்றில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்தும் பயிற்சி அளிக்கிறோம். ஒவ்வொரு மாணவரும் பெற்றோருடன் நேரம் செலவடுவது வெகுவாக குறைந்துள்ளது. யாரிடமும் பேசாமல் இருக்கும் நிலையை இன்று பார்க்கமுடிகிறது. இத்தகைய சூழலை போக்கும் வகையில், ஒவ்வொரு மாணவரையும் ஒரு ஆசிரியரிடம் வாரத்திற்கு ஒரு முறை நேரடியாக கலந்துரையாட செய்கிறோம்.தொழில்முனைவோராக சாதனை படைப்பதற்கு தேவையான திறன்களை வளர்க்கவும் உரிய முயற்சிகளை எடுத்துவருகிறோம். இவை மட்டுமின்றி ஒழுக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். என்.எஸ்.எஸ்., வாயிலாக கண் முகாம், பல் மருத்துவ முகாம் ஆகியவற்றில் பங்கெடுக்க மாணவர்களை ஊக்குவிக்கிறோம். சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் அளித்து, பிளாஸ்டிக் இல்லாத கல்லூரி வளாகமாக மாற்றியுள்ளோம். -நித்யா ராமச்சந்திரன், துணை இணை செயலர், சங்கரா கல்வி நிறுவனங்கள், கோவை.