உள்ளூர் செய்திகள்

டோபல் தேர்வு அங்கீகாரம் - சில தகவல்கள்

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் டோபல் என்னும் ஆங்கில மொழித் திறனறியும் தேர்வு மூலமாகவே நாம் எந்தப் படிப்பிலும் சேர முடியும் என்பதை அறிவோம். இதை இ.டி.எஸ்., என்னும் அமைப்பு நடத்தி வருகிறது. இந்தத் தேர்வு குறித்து சில முக்கியமான தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. * இளநிலை மற்றும் பட்டப்படிப்பு முடித்த விண்ணப்பதாரர்களின் ஆங்கில மொழித் திறன் அறிய சரியான தேர்வாக இருக்கும் டோபல் தேர்வை உலகெங்கும் 7 ஆயிரத்து 300 கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கின்றன. * இதில் 5 ஆயிரத்து 175 கல்வி நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் கனடாவிலும், ஐரோப்பாவில் ஆயிரம் நிறுவனங்களும், பிரிட்டனில் 200ம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 100ம், ஆசியாவில் 600 நிறுவனங்களும் உள்ளன. எஞ்சியவை ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவை. * 130 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியலானது சூகூOஉஊஃ ஈஉகுகூஐNஅகூஐON ஈஐகீஉஇகூOகீஙு’ என்னும் புத்தகத்தில் உள்ளது. * கடந்த ஆண்டில் மட்டும் 383 புதிய கல்வி நிறுவனங்களில் டோபல் தேர்வுக்கான அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. * இப்படி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் புதிய மையங்கள் ஆண்டு தோறும் இ.டி.எஸ்., அமைப்பால் ஏற்படுத்தப்படுகின்றன. உலகெங்கும் தற்போது 4 ஆயிரத்து 500 மையங்களில் இத் தேர்வை எழுதலாம். * தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தேர்வு முறையை செயல்திறனுடனும் இலகுவாகவும் நடத்திட இ.டி.எஸ்., அமைப்பு முயற்சித்து வருகிறது. ஆண்டு தோறும் உலகின் பல நாடுகளிலும் 10 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வானது பல பல்கலைக்கழகங்களால் 45 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !