பேஷன் நிபுணராக என்.ஐ.எப்.டி., நுழைவுத்தேர்வு எழுதுங்கள்
பேஷன் துறையில் நிபுணராக ஆசைப்படும் மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு தயாராகலாம். என்.ஐ.எப்.டி.,(நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி) என்.ஐ.எப்.டி. கல்வி நிறுவனமானது 1986ஆம் ஆண்டு நெசவுத்தொழில் அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் கோட்பாட்டின் கீழ் துவங்கப்பட்டது. உலகம் முழுவதும் மேம்பட்டு இருக்கும் பேஷன் துறையை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்தியாவில் புதுடில்லி, பெங்களூரு, சென்னை, காந்திநகர், ஐதராபாத், கோல்கட்டா, மும்பை, போபால், குன்னுõர், பாட்னா, சில்லாங், ரேபரேலி ஆகிய முக்கிய நகரங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் வெளிநாட்டுத் தரத்துடன் மாணவர்களுக்கு பேஷன் துறை சார்ந்த படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. என்.ஐ.எப்.டி., 2010 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் 2010 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுவிட்டது. என்.ஐ.எப்.டி.,யின் அனைத்து கிளை நிறுவனங்களுக்கும் பொதுவாக இந்த நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்தந்த நிறுவனங்களில் தேவைப்படும் இடங்களை பொறுத்தே இட சேர்க்கை நடத்தப்படும். படிப்புகள்கீழ்கண்ட இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் இந்த கல்வி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. * இளநிலை படிப்புகள்: பி.டிசைன்( அக்சசரி டிசைன்)பி.டிசைன்( பேஷன் கம்யூனிகேஷன்)பி.டிசைன்( பேஷன் டிசைன்)பி.டிசைன்( ஆடைபின்னுதல்)பி.டிசைன்( லெதர் டிசைன்)பி.டிசைன்( டெக்ஸ்டைல் டிசைன்)பி.எப்டெக்.( அப்பரல் புரொடக்ஷன்) * முதுநிலை படிப்புகள்: எம்.டிசைன்( டிசைன்)எம்.எப்.எம்( பேஷன் மேனேஜ்மென்ட்)எம்.எப்டெக்( பேஷன் டெக்னாலஜி)டெக்னாலாஜியில் சேர * பி.இ.,/பி.டெக்., (டெக்ஸ்டைல்/மெக்கானிக்கல்/ இண்டஸ்டிரியல்/ எலக்ட்ரானிக்ஸ்/ கம்ப்யூட்டர்/ ஐ.டி.,) தகுதிகள்இளநிலை படிப்புகள்: டிசைனிங் பாடபிரிவில் சேர:* மத்திய /மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட பிளஸ்2 (10+2)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது * ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற 3 அல்லது 4 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். டெக்னாலஜியில் சேர* மத்திய /மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட பிளஸ்2 (10+2)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம், இயற்பியல், வேதியல் பிரிவுகளில் கட்டாய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது* ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற 3 அல்லது 4 வருட டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். முதுநிலை படிப்புகள்: டிசைனிங் பாடபிரிவில் சேர:* பி.எஸ்சி., ( டெக்ஸ்டைல்)அல்லது* இளநிலை பட்டபடிப்பு( பேஷன் டிசைன்/ விசுவல் கம்யூனிகேஷன்/கிராபிக் டிசைன்/ இண்டஸ்டிரியல் டிசைன்/ மல்டிமீடியா டிசைன்) அல்லது* பி.ஆர்க்., அல்லது* டிசைன் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். * இந்த துறையில் போதிய முன்அனுபவம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேனேஜ்மென்ட் படிப்பில் சேர:* இந்திய பல்கலைகழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாடபிரிவில் மூன்று வருட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது * என்.ஐ.எப்.டி.,யில் பேஷன் டிசைன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயதுவரம்புஇளநிலை பட்டபடிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நவம்பர் 1, 2009 அன்று 23வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு:ஆதி திராவிடர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர், என்.ஆர்.ஐ., ஆகிய பிரிவுகளின் கீழ் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.ஆதி திராவிடர்- 15%பழங்குடியினர்- 7.5%மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- 27%உடல் ஊனமுற்றோர் - 3% என இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முறை* என்.ஐ.எப்.டி., நுழைவுத்தேர்வு எழுத விரும்புவோர் இந்தியாவில் உள்ள அனைத்து ‘ஆக்சிஸ்’ வங்கியின் கிளைகளில் ரூ.250 செலுத்தியே அப்ளிகேஷனை பெறலாம். * இந்த நுழைவுத்தேர்வு எழுத விரும்புவோர் ‘ஆன்லைனிலும்’ விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நுழைவுத் தேர்வு எழுத ஒவ்வொரு பிரிவினருக்கும் தேர்வு கட்டணம் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் * பொது / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் உள்ளவர்கள் ரூ.1,250/- காசோலையாக அனுப்ப வேண்டும். * ஆதி திராவிடர்/பழங்குடியினர் / உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ் உள்ளவர்கள் ரூ.750 காசோலையாக அனுப்ப வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்காதவர்கள் * பொது / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் உள்ளவர்கள் ரூ.1,000/- காசோலையாக அனுப்ப வேண்டும். * ஆதி திராவிடர்/பழங்குடியினர் / உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழ் உள்ளவர்கள் ரூ.500 காசோலையாக அனுப்ப வேண்டும். இந்த காசோலையை “ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ புதுடில்லி என்ற பெயரில் எடுக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை* ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்னதாக தேர்வுக்கட்டணத்தை வங்கிகளில் செலுத்த வேண்டும். *பின், ஆன்லைன் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அதற்கான பிரதியை (PRINT OUT) எடுத்துக் கொள்ள வேண்டும். * அந்த பிரதியில் புகைப்பட பகுதியில் உங்கள் புகைப்படத்தை ஒட்டி உங்கள் கையொப்பமிட வேண்டும். * காசோலையின் பின்புறம் உங்கள் பெயர், அப்ளிகேஷன் எண், எந்த படிப்பிற்கான விண்ணப்பம் என எழுதி, பிரதியுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும். The Project ManagerCMS, All India Management Association,Management House,14 Institutional Area,Lodhi Road, New Delhi 110003. நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5, 2010*விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: ஜனவரி 9, 2010*எழுத்துத்தேர்வு நடக்கும் நாள்: பிப்ரவரி 21, 2010*எழுத்துத்தேர்வு முடிவு வரும் நாள்: ஏப்ரல் முதல் வாரம்*சிசுவேஷன் தேர்வு/ ஜி.டி.,/ இன்டர்வியூ நடக்கும் நாள்: ஏப்ரல் - மே, 2010*இளநிலை படிப்புக்கான இறுதி முடிவுகள்: மே இரண்டாம் வாரம், 2010*முதுநிலை படிப்புக்கான இறுதி முடிவுகள்: ஜூன் இரண்டாம் வாரம், 2010 மேலும் இந்த நுழைவுத் தொடர்பான தகவல்களை பெற : http://www.nift.ac.in/admissions1.html -யை தொடர்பு கொள்ளவும்.