உள்ளூர் செய்திகள்

பல் மருத்துவம் படிக்க ஆர்வமா...

முதுகெலும்பு உள்ள அனைத்து உயிரினங்களின் தாடையில் பற்கள் காணப்படுகின்றன. இவை உணவுப்பொருளை உண்பதற்கும், தற்காப்புக்காகவும், முகத்தின் அழகை மேம்படுத்தவும் உதவுகின்றன. பற்கள், தாடை மற்றும் வாய்ப்பகுதி போன்றவற்றில் ஏற்படும் நோய்களை கண்டறிதல், குணமாக்குதல், காரணங்களை கண்டறிதல், பற்களை புதுப்பித்தல், பராமரித்தல் போன்றவற்றை பற்றி படிக்கும் படிப்பு ‘பல் மருத்துவம்’. இத்துறை வல்லுனர்களை ‘பல் மருத்துவர்’ என்று அழைப்பார்கள். பல் மருத்துவம் என்பது ‘ஸ்டோமடாலஜி’ (stomatology) என்ற வாய் நோய்கள் பற்றி படிக்கும் படிப்பின் ஒரு பகுதியாகும். மருத்துவ முறைகள்: பி.டி.எஸ்., (பேச்சிலர் ஆப் டென்டல் சர்ஜரி) படிப்பு ஓராண்டு செய்முறை பயிற்சியை உள்ளடக்கியது. பல் மருத்துவ மாணவர்களுக்கு அடிப்படை மருத்துவமும் கற்றுத்தரப்படுகிறது. மிகவும் முற்றிய நிலையிலுள்ள பல் சார்ந்த பிரச்னைகள் அறுவை சிகிச்சை முறையில் தான் சரி செய்யப்படுகின்றன. பற்கள் சிதைவடைந்தாலோ, சொத்தைப் பல் ஏற்பட்டாலோ பாதரசம் போன்ற உலோகப் பொருட்கள் கலந்த கலவையாலோ, பீங்கானால் தயாரிக்கப்பட்ட கலவையாலோ சரிசெய்யப்படுகின்றன. எக்ஸ்-ரே கதிர் வீச்சின் மூலமாக மருத்துவர்கள் பல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். உடலின் மற்ற பாகங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும், நரம்புகளில் பிரச்னை ஏற்பட்டாலும் பற்களில் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கான மருத்துவத்தையும் பல் மருத்துவத்தில் பயிலலாம். துறைகள்: பல் மருத்துவத் துறையானது பல்வேறு பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. பற்கள் சார்ந்த பிரிவுகள் மட்டுமல்லாமல் உயிரியல் தொடர்பான பல பிரிவுகள் இப்படிப்பை சார்ந்தது. பயோகெமிஸ்ட்ரி, நான் கிளினிக்கல் பிசியாலஜி, அனாடமி, டென்டல் மெட்டீரியல்ஸ், பத்தாலஜி, மைக்ரோபயாலஜி, பார்மகாலஜி, டென்டல் ஹிஸ்டாலஜி, எம்ப்ரியோலஜி போன்ற பாடத்திட்டங்கள் கற்றுத்தரப்படுகின்றன. டென்டல் பப்ளிக் ஹெல்த்: இப்பிரிவில் பற்கள் சார்ந்த தொற்றுநோய் பற்றியும், சமூகத்தில் உடல்நலம் பற்றிய கொள்கைகளையும் விளக்குகிறது. என்டோடான்டிக்ஸ்: பற்குழி தொடர்பான நோய்களை பற்றிய பிரிவாகும். ஓரல் மெடிசின் மற்றும் ரேடியாலஜி: கதிர் வீச்சுகள் மூலம் நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முறைகளை பற்றியதாகும். ஓரல் மற்றும் மேக்சில்லோபேஷியல் சர்ஜரி: பற்கள், தாடைகளில் உள்ள நோய்கள், புண்கள், கட்டிகள் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளித்தல் பற்றிய பிரிவாகும். ஆர்த்தோடான்டிக்ஸ் மற்றும் டென்டோபேசியல் ஆர்த்தோபீடிக்ஸ்: பற்களை சீராக்குதல், மாற்றியமைத்தல், சதைகளை அகற்றுதல் போன்றவற்றை பற்றிய பிரிவாகும். பீரியோடான்டிக்ஸ்: பற்களைச் சுற்றியுள்ள ஈறுகள், திசுக்கள் தொடர்பான நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்றவை பற்றிய பிரிவாகும். பிடொடான்டிக்ஸ்: குழந்தைகளுக்கான பல் மருத்துவத்துடன் தொடர்புடையது. பிரோஸ்தோடான்டிக்ஸ்: செயற்கை பற்களுக்கு பதிலாக புதிய பற்களைப் பொருத்துதலுடன் தொடர்புடையது. கான்சர்வேட்டிவ் டென்டிஸ்ட்ரி அண்டு எண்டோடான்டிக்ஸ்: உடைந்த பற்களை செராமிக் காம்போசைட், அல்ட்ராசோனிக், ஏர் வாட்டர் கூலண்ட் போன்றவற்றை பயன்படுத்தி சீர்செய்வது பற்றிய படிப்பாகும். டென்டல் அனெஸ்தெசியாலஜி: பல் நோய்களால் ஏற்படும் வலிகளை வலிநிவாரணம் மூலம் குணமாக்குவது பற்றிய படிப்பாகும். ஓரல் பயாலஜி: இத்துறையில் பற்கள் மற்றும் முகசீரமைப்புடன் தொடர்புடைய‘கிரானியோ பேசியல் பயாலஜி’ துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. காஸ்மெட்டிக் டென்டிஸ்ட்ரி: பற்குழிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை பற்றிய படிப்பாகும். பாரன்சிக் ஓடொன்டாலஜி: சட்டத்தில் பல் அமைப்பு தொடர்பான ஆதாரங்களை பயன்படுத்த தகவல் களை சேகரித்து தரும் படிப்பாகும். ஜிரியாட்ரிக் டென்டிஸ்ட்ரி: வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய படிப்பாகும். பயிலும் நிறுவனங்கள்* அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை ( http://www.tamilnadudentalcollege.com/course.php ) * எஸ்.ஆர்.எம்., பல் மருத்துவக் கல்லூரி ,சென்னை ( http://www.srmuniv.ac.in/srmgroup/srmdencol.html )* ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் கல்லூரி மற்றும் பல்மருத்துவக் கல்லூரி ( http://www.srmc.edu/university/publications.asp?res=31 )* ஸ்ரீ பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சென்னை ( http://www.sbdch.ac.in/index.htm )* சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை ( http://www.saveetha.com/ )* ஜே.கே.கே.நடராஜா பல் மருத்துவக் கல்லூரி, குமாரபாளையம். ( http://www.jkknataraja.org/Dental_criteria.html )* மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி, மதுரவாயல், சென்னை ( http://www.meenakshiammaldentalcollege.org/index.htm )* ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி, சென்னை. ( http://www.rdc.ac.in/index.html )* மாதா பல் மருத்துவக் கல்லூரி, சென்னை (  http://www.madhadentalcollege.com/ )* மவுலானா ஆசாத் பல் மருத்துவக் கல்லூரி, புதுடில்லி ( http://www.mamc.ac.in/index.html )


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !