உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேத மருத்துவத் துறையும், வாய்ப்புகளும்...

ஆயுர்வேத மருத்துவமானது, மிகவும் பழமை வாய்ந்த மருத்துவ முறை என்பதை நாம் அறிவோம். இதன் தோற்றக் காலம் கி.மு. 600 ம் ஆண்டு என கருதப்படுகிறது. ‘ஆயுர் வேதா’ எனும் சொல் சமஸ்கிருத மொழி வகையை சேர்ந்ததாகும். ஆயுர் என்றால் ‘உயிர்’ மற்றும் வேதா என்றால் ‘அறிவு’ என்பது பொருளாகும். ஆயுர்வேத மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ‘வைத்யாஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்களது பணியானது உறுதியான உடல்நலம், இயற்கையான அழகு மற்றும் நீண்ட கால வாழ்க்கை உள்ளிட்டவற்றை அளிப்பதாகும். ஆயுர்வேதத்தின் சிறப்பு ஆயுர்வேத மருத்துவ முறைப்படி ‘உயிர்’ என்பது மனம், ஐம்புலன்கள், உடல் மற்றும் ஆன்மா உள்ளிட்டவையின் இணைப்பாகும். மனித இனம் மற்றும் இயற்கைக்கு இடையே முழுமையான இணைப்பு உள்ளதாக, மருத்துவ அமைப்பு கூறுகிறது. இவை இரண்டுக்கும் இடையே எப்போது பிளவு ஏற்படுகிறதோ, அப்போது தான் நோய்களின் தாக்கம் ஏற்படுகிறது. மருத்துவ துறையை பொறுத்த வரைக்கும், குணப்படுத்துவது என்பது அடிப்படையான செயல். ஆனால், அதை இயற்கை மற்றும் இயற்கை சார்ந்த விளைபொருட்கள் மூலம் குணப்படுத்துவது தான், ஆயுர்வேத மருத்துவத்தின் நோக்கமாகும். மேலும், ‘நோய் வருவதற்கு முன் தடுப்பதே’ ஆயுர்வேத மருத்துவத்தின் கொள்கையாகும். உலக மருத்துவ துறையில், ஆயுர்வேதம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. நவீன மருத்துவ துறை மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையில், நோய்களுக்கு எதிராக குணப்படுத்தும் முயற்சியில் சிறப்பாக செயல்பட முடியாது. ஆனால், ஆயுர்வேத மருத்துவமானது எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், இயற்கையான முறையில் சிறப்பாக செயல்படக் கூடியது. ஆயுர்வேதத்தின் துவக்கம்இந்திய அரசு, ஆயுர்வேதம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் எனும் அமைப்பை 1969ம் ஆண்டு நிறுவியது. இந்த அமைப்பானது, நான்கு தனிப்பட்ட கவுன்சில்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 1. ஆயுர்வேதம் மற்றும் சித்தா2. யுனானி 3. யோகா மற்றும் நேச்சுரோபதி 4. ஓமியோபதி மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் தோற்றுவிக்கப்பட்ட, ஆயுர்வேதம் மற்றும் சித்தா ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் எனும் அமைப்பு, சுயாட்சி நிர்வாகமாகும். ஆயுர்வேதம் குறித்து பல வகையான அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதே அமைப்பின் நோக்கமாகும். இளநிலை ஆயுர்வேத படிப்புபி.ஏ.எம்.எஸ்., (இளநிலை ஆயுர்வேதம் மற்றும் அறுவை சிகிச்சை) எனும் இளநிலை ஆயுர்வேத படிப்பானது ஐந்தரை ஆண்டு காலம் (நாலரை ஆண்டு படிப்பு + ஒரு வருட பயிற்சி) பயிலக் கூடியது. தகுதிகள்: மாணவர்களின் வயது 17 முதல் 25க்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்øத் தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். நுழைவுத்தேர்வு அல்லது பிளஸ் 2வில் எடுத்த மார்க் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதுநிலை ஆயுர்வேத படிப்புஎம்.டி., ஆயுர்வேதா எனும் முதுநிலை படிப்பானது மூன்று ஆண்டு காலம் பயிலக் கூடியது. தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.ஏ.எம்.எஸ்., முடித்திருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது இந்தியாவில் ஆயுர்வேத கல்வியானது, இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் எனும் அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் சட்ட திட்டத்திற்கு கட்டுப்பட்டது. தற்போது, இந்தியாவில் 154 இளநிலை படிப்புக்குரிய ஆயுர்வேத கல்லூரிகளும், 33 முதுநிலை படிப்புக்குரிய ஆயுர்வேத கல்லூரிகளும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. * ஆர்.வி.எஸ்., ஆயுர்வேத கல்லூரி, கோயம்புத்தூர்* தர்மா ஆயுர்வேத கல்லூரி, ஸ்ரீ பெரும்புதூர்* ஸ்ரீ சங்கரா ஆயுர்வேத கல்லூரி, திருச்சி* ஸ்ரீ சாய்ராம் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், காஞ்சிபுரம்* ஸ்ரீ ஜெயந்திரே சரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி, திருவள்ளூர் வேலைவாய்ப்புகள்ஆயுர்வேத மருத்துவத்துக்குரிய வேலை வாய்ப்புகள் இந்தியா முழுவதும் பெருமளவில் உள்ளன. அரசு மருத்துவமனைகளில், ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மாத வருமானம் தொடக்கத்தில் சராசரியாக ரூ.8 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை கிடைக்கிறது. தற்போது குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் ஆயுர்வேத மருத்துவம் புகழ்பெற்று வருகிறது. ஆயுர்வேத மருத்துவ முறையில், சிகிச்சை மேற்கொள்வதற்காக, உலகம் முழுவதிலிருந்து ஏராளமான நோயாளிகள் இந்தியா வருகின்றனர். இனிவரும் காலங்களில் ஆயுர்வேத மருத்துவர்களின் தேவை அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !