பெருகி வரும் ‘சைக்கியாட்ரி’ படிப்புக்கான வேலை
நவீன காலத்தில் புதிய பிரச்னைகளை எதிர் கொள்வதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, பலர் மனநோய்க்கு ஆட்பட்டு விடுகின்றனர். மனநோயை நீக்குவதற்கு, சைக்கியாட்ரி (Psychiatry) முறையில் சிகிச்சை அளிப்பது என்பது அவசியமாகிறது. மருத்துவ துறையில், சைக்கியாட்ரி படிப்பு முக்கிய பிரிவாக விளங்குகிறது. மனநோய் குறித்த சைக்கியாட்ரி படிப்பதன் மூலம், மனநோய் சம்பந்தப்பட்ட உடல்நல கேடுகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கலாம். மனிதமூளையில் உள்ள சிக்கலான வழிகளை, மிக நுட்பமான முறையில் ஆராய்ந்து சிகிச்கை அளிப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு நபருக்கும், தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மனநோய் மருத்துவர் (Psychiatrist): சைக்கியாட்ரி படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் சைக்கார்டிஸ்ட் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள், மனிதர்களின் மனநோய், உணர்ச்சி வேகம் மற்றும் நடத்தைக்குரிய செயல்பாடுகள் உள்ளிட்ட பிரச்னைகளை திறமையாக கையாண்டு, தீர்த்து வைப்பார்கள். சைக்காலஜிஸ்ட் மற்றும் சைக்கார்டிஸ்ட் இடையேயுள்ள வேறுபாடுகள்: சைக்காலாஜிஸ்ட் மற்றும் சைக்கார்டிஸ்ட் உள்ளிட்ட இருவருமே, மன நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆவார்கள். ஆனால், மனச் சோர்வுள்ள நோயாளிகளுக்கு, சைக்காலஜிஸ்ட் முதன்மையாக கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி உள்ளிடவற்றை மேற்கொண்டு தீர்வு காண்பார். சைக்கார்ட்டிஸ்டும் சைக்கோதெரபியை தான் மேற்கொள்வார். ஆனால், கூடுதலாக மருத்துவ வழிமுறைகளையும் கடைபிடிப்பார். மேலும், மின் வலிப்பு சிகிச்சையையும் (electroconvulsive therapy) மேற்கொள்வார். சைக்கார்டிஸ்ட் என்பவர் மருத்துவ தொழில் முறைகள் சார்ந்த மருத்துவர் (MBBS). ஆனால், சைக்காலஜிஸ்ட் மருத்துவ பட்டம் மட்டும் பெற்றவர். மருத்துவ தொழில் முறைகள் சாராதவர். சைக்கியாட்ரி கல்விக்கான தகுதிகள்: சைக்கியாட்ரி படிப்பானது, எம்.டி.,(சைக்கியாட்ரி) மற்றும் டி.பி.எம்., (டிப்ளமோ இன் சைக்கியாட்ரி மெடிசின்) என இரு வகைகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. எம்.டி.,(சைக்கியாட்ரி): இந்திய மருத்துவ கவுன்சிலால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்களது பட்டப்படிப்பில் சைக்கியாட்ரி படிப்பை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும். மேலும், எம்.டி., படிப்பில், ஆய்வாளர் உதவியுடன் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுத வேண்டும். இதன் கால அளவு 3 வருடம். இது தவிர, நேஷனல் போர்டு தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.(டிப்ளமோ ஆப் நேஷனல் போர்டு எக்ஸாம்) கோர்ஸானது, எம்.டி., (Doctor of Medicine) படிப்புக்கு சமமாக கருதப்படுகிறது. எம்.டி.,(சைக்கியாட்ரி) பாடதிட்டத்தில் சைக்காலாஜி, அனாடமி, பிசியாலாஜி, பயோகெமிஸ்ட்ரி, நியூராலஜி மற்றும் நியூரோசர்ஜரி உள்ளிட்ட பாடங்கள் உள்ளன. இதற்காக, மனநோய் மருத்துவ நிலையங்களில் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக, சைக்காலாஜி பிரிவில் மட்டும், குழந்தைகள் சம்பந்தமான உளவியல், சமுதாயத்துக்குரிய உளவியல், நீதிமன்றத்துக்குரிய உளவியல், சமூகம் சார்ந்த உளவியல் மற்றும் பிரச்னைகளை சமாளிக்கக் கூடிய உளவியல் உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளது. டி.பி.எம்.,(டிப்ளமோ இன் சைக்கியாட்ரி மெடிசின்): இந்திய மருத்துவ கவுன்சிலால், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்களது பட்டப்படிப்பில் சைக்கியாட்ரி படிப்பை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்பது அவசியமாகும். இந்த படிப்பில், ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டியதில்லை. இதன் கால அளவு 2 வருடம். சைக்கியாட்ரி படிப்புக்கான வேலைவாய்ப்புகள்: சைக்கியாட்ரி படிப்புக் கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் அதிக அளவில் உள்ளன. மேலும், வெளிநாடுகளிலும் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. தற்போது, சைக்கார்டிஸ்ட் தேவையின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. *சைக்கார்டிஸ்டுகள் சொந்தமாக கிளினிக் நடத்தலாம். *மனநோய் மருத்துவமனைகளில் மருத்துவராக பணிபுரியலாம். * பொதுவாக சைக்கார்டிஸ்டுகள் அதிகமான எண்ணிக்கையில் மறுவாழ்வு மையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மையங்களில், அவர்களின் பணியானது, இளம்பருவத்தில் குற்றச் செயல் புரிபவர்கள், போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் விடாத குடிப்பழக்கம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்களை திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதாகும். கீழ்க்கண்ட இந்திய நிறுவனங்கள் சைக்கியாட்ரி படிப்பை வழங்குகின்றன.* சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் சைக்கியாட்ரி, ராஞ்சி* இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் அண்டு அலைடு சைன்ஸ்சஸ், புது டில்லி* கர்நாடகா யுனிவர்சிட்டி, தார்வாட்* லேடி ஹார்டிஞ்ச் மெடிக்கல் காலேஸ், புதுடில்லி* மவுலானா ஆசாத் மெடிக்கல் காலேஜ், புதுடில்லி* நேஷனல் கவுன்சில் ஆப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்டு டிரெய்னிங், புது டில்லி* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்டல் ஹெல்த் அண்டு நியூரோ சயின்சஸ், பெங்களூரு