கிரிமினாலஜி
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருவதால் குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. பயங்கரவாத அச்சுறுத்தல்களும் நாட்டின் அமைதியை சீர்குலைத்து வருகின்றன. இவற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க குற்றவியல் வல்லுனர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் குற்றவியல் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. உளவியல், சமுதாயம் மற்றும் சட்டம் போன்றவற்றுடன் தொடர்புடையது குற்றவியல் துறை. குற்றசெயல்களுக்கு பின்னணியாக அமையும் சமுதாய மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் குறித்து குற்றவியல் கல்வியல் கற்றுதருகிறார்கள். குற்றங்களை கண்டுபிடிப்பது, அவற்றை தடுப்பது போன்றவற்றையும் இந்த படிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் குற்றவியல் கல்வி கற்பவர்கள் கிரிமினல்களின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. தகுதிகள்குற்றவியல் துறையில் சேர்ந்து படிப்பதற்கு பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவில் வேண்டுமானாலும் படித்திருக்கலாம். சிறப்பு தகுதிகளாக ஒரு விஷயத்தை அலசி ஆராயும் திறன், தகவல்களை திரட்டும் திறன் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும். உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குற்றங்களை அணுகும் திறனும் பெற்றிருத்தல் அவசியம். மேலும் சோர்வில்லாமல் எந்நேரமும் செயல்பட தயராக இருக்க வேண்டும். பட்டபடிப்புகள்குற்றவியல் கல்வியில் பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் கலை மற்றும் அறிவியல் என இருபிரிவுகளும் உள்ளன.* பி.ஏ., கிரிமினாலஜி* பி.எஸ்சி., கிரிமினாலஜி* எம்.ஏ., கிரிமினாலஜி* எம்.எஸ்சி., கிரிமினாலஜி கல்வி நிறுவனங்கள்:* டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ், மும்பை* சென்னை பல்கலைக்கழகம், சென்னை* உத்கல் பல்கலைக்கழகம், புவனேஸ்வர்* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகபட்டினம்* குஜராத் பல்கலைக்கழகம், குஜராத்* பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்போன்றவை குற்றவியல் படிப்புகளுக்கு இந்தியாவில் காணப்படும் சிறந்த கல்வி நிறுவனங்கள். வேலைவாய்ப்புகள்குற்றவியல் கல்வி கற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் புலனாய்வு துறைகளில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள சிறைச்சாலைகளில் இந்த துறையில் படித்தவர்கள் தேவை அதிகமாக உள்ளது. துப்பறியும் நிறுவனங்கள், காவல்துறை போன்ற நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தனியார் துறையில் வேலையில் சேருபவர்களுக்கு துவக்கத்தில் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. குற்றவியல் துறையில் துப்பறியும் ஆர்வமும், புலனாய்வு திறனும் உள்ளவர்களால் தான் சிறப்பாக செயல்பட முடியும்.