உள்ளூர் செய்திகள்

மனநிறைவு தரும் சமூகசேவை துறை, அதன் படிப்புகள்

இன்றைய சூழலில் சமூக சேவை சமுதாய முன்னேற்றத்துக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. சமுதாய அக்கறையுள்ளவர்கள் மட்டுமே இந்த துறையில் பணியாற்ற முடியும். சமூக சேவை துறையில் ஒரு புதிய பார்வை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. இந்த துறையில் ஈடுபவர்களுக்கு பணியில் ஒருவித மனநிறைவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சிறந்த சமூகநல பணியாளராக செயல்படுவதற்கு நடுநிலைமை மற்றும் ஆர்வம் மிகவும் முக்கியம். மேலும் இந்த துறையில் ஈடுபடுபவர்கள் கடுமையாக உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும். சமுதாய முன்னேற்ற சமூகசேவை, மருத்துவ சமூக சேவை மற்றும் உளவியல் ரீதியான சமூக சேவை என இந்த துறையில் பணிகள் பிரிக்கப்படுகின்றன. சமூகசேவை பாடப்பிரிவுகளில் படித்தவர்கள் மனித இன ஆராய்ச்சியாளர்களாகவும், சமூக அறிஞர்களாகவும் மற்றும் உளவியல் நிபுணர்களாகவும் ஆகலாம். சமூக சேவை சார்ந்த துறைகளுக்கு இந்தியாவில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும் வேலைவாய்ப்புடன் கூடிய படிப்பை அளிக்கும் கல்வி நிறுவனங்களும் உள்ளன. பட்டப்படிப்புகள்சமூகசேவை துறையில் இளநிலை, முதுநிலை, எம்.பில்., மற்றும் பி.எச்டி., படிப்புகளும் காணப்படுகின்றன.* பி.ஏ., (சமூக சேவை)* பி.எஸ்.டபுள்யு., (சோஷியல் ஒர்க்)*  எம்.ஏ., (சமூக சேவை)*  எம்.எஸ்.டபுள்யு.,(சோஷியல் ஒர்க்)* எம்.பில்.,* பிஎச்.டி., தகுதிகள்இளநிலை சமூகசேவை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2வில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத்தேர்வுகள் மூலமாகவும், நேர்முகத்தேர்வுகள் மூலம் இத்துறையில் சேர்ந்து படிக்க மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொறுமை, விழிப்புணர்வு மற்றும் சமூக சேவையில் ஆர்வமுள்ளவர்களா என நேர்முகத் தேர்வில் மாணவர்கள் சோதிக்கப்படுகின்றனர். சமூக சேவை தொடர்பான இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் முதுநிலை படிப்பில் சேர்ந்து படிக்கலாம். சமூக சேவை எம்.பில்., படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு எம்.எஸ்.டபுள்யு.,வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூக சேவை ஆராய்ச்சி படிப்பான பிஎச்.டி.,யில் சேர எம்.எஸ்.டபிள்யூ., அல்லது இந்த துறையில் எம்.பில்., முடித்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள்சமூக சேவை துறையில் இந்தியாவில் பல நல்ல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் கூடிய கல்விநிறுவனங்களும் உள்ளன. * டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ், மும்பை* டில்லி ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க், டில்லி* இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் வெல்பேர் அண்டு பிசினஸ் மேனேஜ்மென்ட், கோல்கட்டா* இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ், ஆக்ரா* மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க், சென்னை* கர்வி இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ், புனே* ஸ்ரீதேவி இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் ஒர்க், மங்களூரு வேலைவாய்ப்புகள்பொதுவாக சமூக சேவை பணிகள் மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. முதலாவதாக குற்றவியல் மற்றும் ஒழுங்குமுறை சமூகசேவை. இவர்களுக்கு சிறைச்சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் பணிவாய்ப்புகள் காணப்படுகின்றன. இரண்டாவதாக மருத்துவம் மற்றும் உளவியல் ரீதியான சமூக சேவை. இவர்களுக்கு மனநல மருத்துவமனை, கவுன்சிலிங் மையங்கள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் போன்றவற்றில் பணிவாய்ப்புகள் உள்ளன. மூன்றவதாக சமுதாய முன்னேற்றம் சார்ந்த சமூகசேவை. இவர்களுக்கு சமுதாய மற்றும் பொது நல அமைப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகங்கள், கல்வி மற்றும் எழுத்தறிவு இயக்கங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. பொதுவாக சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சமூகசேவை படிப்பு முடித்தவர்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப மேற்கூறிய வேலைவாய்ப்புகளில் ஒன்றினை பெறலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !