ஆன்க்காலஜி (புற்றுநோயியல்)
புற்றுநோய் என்பது உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் எண்ணிக்கையில் பெருகி பிரிவதால் ஏற்படும் நோயாகும். நாளடைவில் இவை உடலில் உள்ள அனைத்து தசைகளையும் முற்றிலும் தாக்குகின்றன. இந்த புற்றுநோயானது எந்த வயதினரையும் தாக்கக்கூடியது. வயதானவரை சற்று அதிக அளவில் தாக்கும். இந்த புற்றுநோயை முழுவதுமாக ஆராய்ந்து படிக்கும் மருத்துவத்துறை சார்ந்த படிப்பு "புற்றுநோயியல் (ஆன்க்காலஜி)'. இப் படிப்பில் இந்நோய் ஏற்படும் காரணங்கள், சிகிச்சைகள் மற்றும் நோய் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் போன்றவற்றை பயிலலாம். நோயை கண்டறிதல்:மிகுந்த சோர்வு, எடை குறைவு, ரத்தசோகை, தொடர்ச்சியான காய்ச்சல், போன்றவை நோய் அறிகுறிகளாக கருதப்படுகின்றன. அதன் பின் உடல் திசு ஆய்வு (பயாப்சி), எண்டோஸ்கோபி போன்றவற்றின் உதவியுடன் உடலில் இருப்பது புற்றுநோய் கட்டியா? இல்லை சாதாரண கட்டியா என கண்டறியலாம். எக்ஸ் கதிர்கள், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் போன்றவற்றின் வாயிலாகவும் நோய் கண்டறியும் வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியாக நோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட பின் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிகிச்சைகள்: சிகிச்சைகள் புற்றுநோய் கட்டியின் தரம், வீரியம், நோயாளியின் நிலைமை ஆகியவற்றை பொறுத்து அளிக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை, வேதியியல் சிகிச்சை (ஹீமோதெரபி), கதிரியக்க சிகிச்சை (ரேடியேசன்), இலக்கை நோக்கிய சிகிச்சை, ஹார்மோனல் சிகிச்சை, உறுப்பு மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. புற்றுநோயியல் துறையானது சிகிச்சை முறைகளின் படி சில துணைப்பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. குழந்தை மருத்துவம் புற்றுநோயியல்:குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பயிலும் நிறுவனங்கள் பிளஸ் 2 விற்கு (இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும்) பின் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு படிக்க வேண்டும். அடுத்ததாக, எம்.சி.எச்., அல்லது டி.எம்., பிரிவில் புற்றுநோயியல் தொடர்பான படிப்புகளில் முதுநிலைப்படிப்புகளை பயில வேண்டும். மெடிக்கல் புற்றுநோயியல்: இம்முறையில் கட்டிகள் மருந்துகள் மூலம் குணமாக்கப்படுகின்றன. இதற்கு உதாரணமாக வேதியியல் சிகிச்சையை (ஹீமோதெரபி) கூறலாம். கைனக்காலஜி புற்றுநோயியல் : இப்பிரிவில் பெண்களின் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை மருத்துவம் புற்றுநோயியல்:குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. பயிலும் நிறுவனங்கள்:பிளஸ் 2 விற்கு (இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருக்க வேண்டும்) பின் எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு படிக்க வேண்டும். அடுத்ததாக, எம்.சி.எச்., அல்லது டி.எம்., பிரிவில் புற்றுநோயியல் தொடர்பான படிப்புகளில் முதுநிலைப்படிப்புகளை பயில வேண்டும். * சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை (http://www.mmc.tn.gov.in/) * டாடா மெமோரியல் மருத்துவமனை , மும்பை (http://www.tatamemorial centre.com)* எய்ம்ஸ் , புதுடில்லி (http://www.aiims.edu/) * ராஜீவ் காந்தி புற்றுநோய் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம், புதுடில்லி (http://-rgci.org/)* கித்வாய் மெமோரியல் புற்றுநோயியல் நிறுவனம் , பெங்களூரு (http://kidwai.kar.nic.in/) * பிராவரா மருத்துவக்கல்வி நிறுவனம், மகாராஷ்டிரா (http://www.pravara.com/) வேலைவாய்ப்பு:இத்துறை முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகளில் பணியில் அமரலாம். அரசுத்துறையில் பணியில் அமர்பவர்கள் மாதம் ரூ30,000 முதல் ஊதியம் பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவோர் ரூ.60,000 முதல் ரூ.2லட்சம் வரை ஊதியம் பெறலாம். திறமை மற்றும் அனுபவத்தை பொறுத்து ஊதியம் உயரும். புற்றுநோய் சிறப்பு மருத்துவமனைகளில் பணியில் உள்ளவர்கள் அதிக அளவில் சம்பாதிக்கலாம்.