ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பு
இந்தியாவில் "ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்'' படிப்பானது, வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் துறையாக இருக்கிறது. தற்போது வேலைவாய்ப்பு மிக்க துறையாகவும், வளம் கொழிக்கும் துறையாகவும் இப்படிப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் இப்படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பு ஜுன் மாதத்தில் வெளியிடப்படும். ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில் " கிரிக்கெட், கால் பந்தாட்டம், ஹாக்கி, கோல்ப் மற்றும் இதர விளையாட்டுத் துறைகளில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டுப் போட்டிளை நிர்வகிக்கவும், திட்டமிடவும், மேற்பார்வையிடவும் பயிற்றுவிக்கப்படுகிறது.'' தலைமைப் பண்பு நலன்கள் குறித்தும் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் பயிற்சியாளருக்கு சிறந்த முறையில் உதவலாம். படிப்பின் பயன்கள்:இந்தியாவில் பயிற்றுவிக்கப்படும் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பில், கீழே உள்ள கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 1. சமூக மற்றும் நன்னெறி சார்ந்த விஷயங்களில் இணக்கம் செய்தல்.2. ஸ்பான்சர்கள், விற்பனை மற்றும் விற்பனைப் பொருட்கள் சார்ந்தவற்றை அறிதல்.3. நிதி மற்றும் விளையாட்டுகளுக்கு இடையேயுள்ள பரஸ்பர தொடர்புகள்.4. மக்கள் தொடர்பு சாதனங்களுக்கு இடையேயுள்ள தொடர்புகள்.5. விளையாட்டு விதிகள் பற்றி கற்றல் .6. விளையாட்டு ஒப்பந்தங்கள் குறித்து கற்றல்.7. போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் அறிந்து கொள்ளுதல்.8. விளையாட்டு நன்னெறிகள் மற்றும் விளையாட்டு நிர்வாகங்கள் பற்றியும் அறிந்து கொள்ளுதல். படிப்பு:ஒரு வருட போஸ்ட் டிப்ளமோ கோர்ஸாக (கஎஈகுM), ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்பு கற்றுத்தரப்படுகிறது. தகுதிகள்:ஏதாவது ஒரு இளநிலைப் பிரிவில் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி படிப்பை இளநிலையில் தேர்வு செய்து படித்து முடித்திருந்தால், கூடுதல் தகுதியாக கருதப்படும். பயிற்றுவிக்கப்படும் கல்வி நிறுவனங்கள்:1. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. http://www.alagappauniversity.ac.in/index.jsp 2. இந்திரா காந்தி விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி நிறுவனம், புதுடில்லி.http://www.igip-ess.com/ வேலைவாய்ப்புகள்: இந்தியாவில், எவரேனும் ஒருவர் டைகர் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டில், விளையாட்டு மேலாளராக பணிக்கு சேர்ந்தால், பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளை நடத்துவதும், பத்திரிகையாளர்களை தொடர்பு கொள்வதும் அவரது பணியாக இருக்கும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மேலாளராகவும் பணிபுரியலாம். இதன் மூலம் பொது தொடர்புகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் அதிகளவில் விளையாட்டு மேலாளர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர். விளையாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது இவர்களது பணியாகும். கிளப், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் விளையாட்டு மேலாளர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர். உடற்பயிற்சிக் கூடம் மற்றும்விளையாட்டு மையங்கள் உள்ளிட்டவற்றை நிர்வகிப்பது இவர்களது பணியாகும். இளநிலை உடற்கல்வி படிப்புடன், போஸ்ட் டிப்ளமோ "ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்' படிப்பையும் சேர்த்து முடிப்பவர்களுக்கு, விளையாட்டு ஆசிரியராக பணிபுரிய வெளிநாடுகளில் வாய்ப்பு உள்ளது. லண்டனில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் பாத் பல்கலைக்கழகம், ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.