உள்ளூர் செய்திகள்

இந்திய ஆஸ்திரேலிய கல்வி கவுன்சிலுக்கான உடன்பாடு

ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்களால் அந்த நாட்டின் மீதான ஈடுபாடு நமது மாணவர்களுக்கு குறைந்து வருவது நாம் அறிந்ததே. இந்த நிலையை மாற்ற ஆஸ்தி ரேலிய அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இந்த நிலையில் அந்த நாட்டிற்குச் சென்றுள்ள இந்திய அரசின் மத்திய மனித வள அமைச்சர் இந்தப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வுகளை உடனே எடுக்குமாறு அந்த நாட்டை வலியுறுத்தியுள்ளார். கல்வித்துறையில் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் ஒன்றினைக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கவுன் சிலுக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளார். இது தவிர ஜாயிண்ட் பேகல்டி டெவலப்மெண்ட் புரோகிராம், இண்டெர் யுனிவர்சிடி கன்வென்ஷன் ஆப் வைஸ் சான்சிலர் என்ற மற்ற இரு முக்கிய உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இரு நாட்டு அமைச்சர்களும் இணைந்து மொத்தம் மூன்று உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியப்பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்திற்கிடையேயான உடன்பாடு, சி.பி.எஸ்.இ., மற்றும் ஆஸ்திரேலிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சிலுக்கிடையேயான உடன்பாடு, எனர்ஜி ரிசர்ச் இன்ஸ்டியூட் மற்றும் டீக்கின் பல்கலைக்கழகத்திற்கிடையேயான உடன்பாடு என்பவைதான் இந்த மூன்று உடன்பாடுகளாகும். இந்தச் சந்திப்பின்போது மாணவர் பரிமாற்றம், ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !