உள்ளூர் செய்திகள்

இந்திராகாந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி நிறுவனம்

இந்திராகாந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி நிறுவனம், சிறந்த விளையாட்டு வீரர்களையும், சிறந்த பயிற்சியாளர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த கல்வி நிறுவனம் 1987ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் டில்லி அரசால் துவங்கப்பட்டது. முதலில் இங்கு பி.எஸ்சி., பிசிகல் எஜுகேசன் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஒரு ஆண்டு பி.பிஎட்., மற்றும் இரண்டு ஆண்டு எம்.பிஎட்., ஆகிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த படிப்புகள் அனைத்தும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலால் (என்.சி.டி.இ.,) அங்கீகரிக்கப்பட்டவை. விளையாட்டுத் துறையில் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக் குவது மட்டுமல்லாமல் நாட்டிற்காக சிறந்த விளையாட்டு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் உருவாக்கும் நோக்கத்தோடு இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரே உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி கல்லூரி இதுதான். மேலும் இங்கு முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், அனுபவமும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் விளையாட்டு வீரர்களாகவும், ஆலோசகர்களாகவும் மற்றும் பயிற்சியாளர்களாகவும் ஜொலிக்கிறார்கள். நோக்கங்கள்:* விளையாட்டு மற்றும் உடற்கல்வித்துறையில் திறமைமிக்க ஆசிரியர்களை உருவாக்குவது.* இந்தத் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டு, விளையாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவது.* மற்ற உடற்கல்வி நிறுவனங்களுக்கு நல்ல ஆசிரியர்களை உருவாக்கித் தருவது.* சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு சிறப்பான பயிற்சியும், வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தருவது.* நாடு முழுவதும் நடைபெறும் விளையாட்டு மற்றும் உடற்கூறு போட்டிகளில் முக்கிய பங்காற்றுவது, ஆகியவற்றை நோக்கங்களாக கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பாடப்பிரிவுகள்:* பிஎச்.டி., (பிசிகல் எஜுகேசன்)* எம்.பில்.,* எம்.பிஎட்.,* பி.பிஎட்.,* பி.எஸ்சி., (பிசிகல் எஜுகேசன், ஹெல்த் எஜுகேசன் அன்டு ஸ்போர்ட்ஸ்), போன்ற பாடப்பிரிவுகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. மேலும் உடல்நலம், ஹெல்த் அன்டு பிட்னஸ் மேனேஜ்மென்ட், ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம் போன்ற சான்றிதழ் பாடப்பிரிவுகளும் இங்கு உள்ளன. வேலைவாய்ப்புகள்:இந்திரா காந்தி உடற்கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பி.எஸ்சி., பி.பிஎட்., முடிப்பவர்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசியர்களாக பணியாற்ற முடியும். இவர்களுக்கு விளையாட்டு ஆலோசகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வாய்ப்புகளும் காணப்படுகின்றன. எம்.பிஎட்., எம்.பில்., மற்றும் பிஎச்.டி., முடிப்பவர்கள் கல்லூரிகளில் உடற்கல்வி துறையில் பணியாற்ற முடியும். மேலும் இவர்கள் தனியாக விளையாட்டு பயிற்சி மையங்கள் அமைத்து, வீரர்களுக்கு பயிற்சியளிக்கவும் முடியும். சான்றிதழ் படிப்பு முடிப்பவர்கள் நியூட்ரிசியன், உடற்பயிற்சி ஆசிரியர் போன்ற பணிகளில் ஈடுபடலாம். இந்த பயிற்சி நிறுவனத்தில் முதுகலை பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸம் துறையிலும் சிறப்பான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலும் இந்த கல்வி நிறுவனத்தின் விவரங்களை தெரிந்து கொள்ள www.igipess.com என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !