உள்ளூர் செய்திகள்

வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்புகள்

இந்திய மாணவர்கள் பலர் வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்புகளை, படிக்க விரும்புகின்றனர். இவ்வாறு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, தேவையான விபரங்களை அறிய நிறைய இணையதளங்கள் உள்ளன. இந்த இணையதளங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும்கல்லூரிகள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்கள் குறித்தும் தனித்தனியாக, விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாடப்பிரிவுகளில் தான் ஆராய்ச்சி படிப்புகள் அதிகளவில் உள்ளன. ஆராய்ச்சி படிப்புகள் பற்றி அறிய உதவும் இணையதளங்கள்:www.collegeboard.com, www.petersonsguide.com, www.usnews.comபோன்ற இணையதளங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் கல்விக் கட்டணங்கள், கல்வி உதவித்தொகை, சேர்க்கை நடைமுறை மற்றும் தரமதிப்பீடு போன்ற விவரங்களும் தரப்பட்டுள்ளன. இவற்றில் சில கல்வி நிறுவனங்களை பற்றி கொடுக்கப்பட்டுள்ள விபரங்களில் ஆராய்ச்சி பிரிவுகளில், அனுபவமிக்க வழிகாட்டிகளின் அறிவுரைகளும் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஆராய்ச்சி பிரிவினை எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் மாணவர்கள் "கிராஜூவேட் ரெக்கார்ட்' (ஜி.ஆர்.இ.,) தேர்வு எழுதுவதன் மூலமாக வெளிநாட்டு ஆராய்ச்சி படிப்புகளில் எளிதாக சேர முடியும். இந்த தேர்வில் மாணவர்களின் குறிப்பிட்ட ஆராய்ச்சி திறன் சோதிக்கப்படுகிறது. இந்த தேர்வு எழுதும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தை தேர்வு செய்து கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !