உள்ளூர் செய்திகள்

இந்திய ராணுவத்தில் டெக்னிகல் கிராஜூவேட் படிப்பு

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய ராணுவத்தில் வரும் ஜனவரி 2011 முதல் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த பொறியியல் பட்டதாரிகளுக்கு 112 ஆவது டெக்னிகல் கிராஜூவேட் படிப்புகளில் சேர்வதற்கான 60 இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், கன்ஸ்ட்ரக்ஷன், ஆட்டோமொபைல், இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, புரொடக்ஷன், ஆர்க்கிடெக்சர், புட் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி ஆகிய இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கும், பொருளாதாரம், சமூக அறிவியல், புவியியல், வரலாறு, இயற்பியல், கணிதம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் எம்.ஏ., அல்லது எம்எஸ்.சி., முடித்தவர்களுக்கும், டயிரியிங் அல்லது அக்ரிகல்ச்சர் பிரிவில் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கும் இந்தப் படிப்பில் சேர வாய்ப்புகள் உள்ளது. முழு விபரங்களை அறிய www.indianarmy.nic.in என்ற இணைய தளத்தைப் பார்க்கவும். சேரவிருக்கும் பிரிவிற்கேற்ப வயதுத் தகுதியும் தேவைப்படும். தேர்ச்சி முறை:இந்தப் பதவிக்கு தேர்ச்சி முறை உளவியல் தேர்வாக இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். குறிப்பிட்ட சில மையங்களில் மட்டுமே நடத்தப்படும் முதல் கட்ட ஆப்டியூட் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே 2வது கட்ட எழுத்துத் தேர்வை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இரண்டாவது கட்டத் தேர்விலும் வெற்றி பெறுபவர்கள் தேர்வு மையங்களில் சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டும். மருத்துவத் தேர்வு:எழுத்துத் தேர்வில் வெற்றிகரமாகத் தேறுபவர்கள் இதற்குப் பின் சர்வீஸ் மருத்துவக் குழுவினரிடம் சென்று அதிலும் திருப்திகரமான உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும். உடல் தகுதி:இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 157.5 செ.மி., உயரம் கொண்டிருக்க வேண்டும். கண் பார்வை 6/6 என்ற அளவிலிருந்து 6/12 க்குள் இருக்கலாம். சம்பளம் என்ன தேர்ந்தெடுக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிக் காலத்தின் போது மாதம் ரூ.21 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும். அதன் பின் ராணுவப் பணிகளுக்குரிய சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிப்பது எப்படி:தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட மாதிரியில் மட்டுமே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் புகைப்படத்தை கையொப்பமிட்டு ஒட்டி அனுப்பவேண்டும். இந்த விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, நிகர மதிப்பெண் சான்று, என்.சி.சி., சான்று, விளையாட்டு வீரருக்கான சான்று போன்றவற்றின் நகல்களை அட்டெஸ்ட் செய்து அனுப்பவேண்டும். இவற்றை அனுப்பும் கவரின் மீது சிவப்பு நிறப் பேனாவில் 112th TGC: ________________ENGINEERING "OR "112th TGC : AEC__________(Name of Subject)" என்று குறிப்பிட்டு பின்வரும் முகவரிக்கு ரெஜிஸ்டர்டு அல்லது ஸ்பீட் போஸ்டில் 21.06.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முகவரி:Integrated Headquarters of Ministry of Defence (Army),AG's Branch, Additional Directorate General of Recruiting,TGC Entry, West Block & III,RK Puram, New Delhi & 110066.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !