இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த விரிவான தகவல்கள்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதை அடுத்து, மாணவர்களின் ஆர்வம் பொறியியல் கவுன்சிலிங்கின் மீது திரும்பியுள்ளது. மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தாங்கள் பெற்ற மதிப்பெண்ணிற்கு எந்த பொறியியல் கல்லூரியில், எந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கியுள்ளனர். தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களும் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் தற்போது 454 பொறியியல் கல்லூரிகளில், ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 250 இடங்கள் உள்ளன. இதில், ஒரு லட்சத்து 8,025 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் 58 மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கிண்டி அண்ணா பல்கலைக் கழக தேர்வு மையம், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரி, புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பாரதி பெண்கள் கல்லூரியில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் பக்தவத்சலம் பாலிடெக்னிக் கல்லூரியிலும், செங்கல்பட்டில் ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியிலும், திருவள்ளூரில் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர், எஸ்.டி., மாணவர்கள் 250 ரூபாய் செலுத்த வேண்டும். இதர மாணவர்கள், 500 ரூபாய் செலுத்த வேண்டும். தபால் மூலமாகவும் விண்ணப்பங்களை பெறலாம். எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர், எஸ்.டி., மாணவர்கள் 450 ரூபாய்க்கும், இதர மாணவர்கள் 700 ரூபாய்க்கும் ‘டிடி’ எடுத்து, ‘செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக் கழகம், சென்னை - 600025’ என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பத்தை தபால் மூலம் பெறலாம். அண்ணா பல்கலைக் கழக இணையதளம் ( www.annauniv.edu/tnea2010 ) மூலமாகவும், விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தை அனுப்பும்போது, விண்ணப்பக் கட்டணத்திற்கான தொகையை ‘டிடி’யாக எடுத்து, அதையும் சேர்த்து அனுப்ப வேண்டும். வரும் 29ம் தேதி வரை, பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் வழங்கப்படவுள்ளன. தினசரி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை தினங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 31ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். * கல்வித் தகுதி:பொறியியல் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சியுடன், பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பொதுப்பிரிவினர் 55 சதவீதத்திற்கு மேல், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் 50 சதவீதத்திற்கு மேல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும். எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர் மற்றும் எஸ்.டி., பிரிவினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்கள், பொதுப்பிரிவு 55 சதவீதம், பிற்படுத் தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற வேண்டும். எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர் மற்றும் எஸ்.டி., பிரிவினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். * பொறியியல் கவுன்சிலில் அட்டவணை:மே 3 - விண்ணப்பங்கள் விற்பனை துவக்கம்மே 29 - விண்ணப்பங்கள் பெற கடைசி நாள்மே 31 - பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்ஜூன் 15 - ‘ரேண்டம்’ எண் வழங்குதல்ஜூன் 18 - தரவரிசைப் பட்டியல் வெளியீடுஜூன் 28 - பொறியியல் கவுன்சிலிங் துவக்கம்ஜூலை 25 - பொறியியல் கவுன்சிலிங் நிறைவு * இடஒதுக்கீடு விவரம்:பொதுப்பிரிவு - 31 சதவீதம்பிற்படுத்தப்பட்டோர் - 26.50 சதவீதம்பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் - 3.50 சதவீதம்மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 20 சதவீதம்எஸ்.சி., - 15 சதவீதம்எஸ்.சி., அருந்ததியினர் - 3 சதவீதம்எஸ்.டி., - 1 சதவீதம் * சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இடங்கள்:பிரிவு - தொழில்நுட்ப இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகள் - அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள்முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் - 142 - 8சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 10 -உடல் ஊனமுற்றோர் மொத்த இடங்களில் 3 சதவீதம் விளையாட்டு வீரர்கள் - 88 - 12 * பொறியியல் கவுன்சிலிங்கில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் விவரம்:பிரிவு - மொத்த இடங்கள் - அரசு ஒதுக்கீட்டு இடங்கள்அண்ணா பல்கலைக் கழகங்கள் - 5,920 - 5,920அரசு கல்லூரிகள் - 2,825 - 2,825அரசு உதவிபெறும் கல்லூரிகள் - 1,930 - 1,544சிறுபான்மை அல்லாத தனியார் கல்லூரிகள் - 1,11,320 - 75,608சிறுபான்மை தனியார் கல்லூரிகள் - 44,255 - 22,128மொத்தம் - 1,71,250 - 1,08,025 * விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:பூர்த்தி செய்யப்பட்ட ‘கோடிங் ஷீட்’சான்றொப்பம் (அட்டஸ்டட்) பெறப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஜெராக்ஸ் பிரதிசான்றொப்பம் பெறப்பட்ட டி.சி.,சான்றொப்பம் பெறப்பட்ட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜெராக்ஸ் பிரதிசான்றொப்பம் பெறப்பட்ட நிரந்தர ஜாதிச் சான்றிதழ் ஜெராக்ஸ் பிரதி (தேவைப்பட்டால்)சான்றொப்பம் பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ் ஜெராக்ஸ் பிரதிபிளஸ் 2 ஹால் டிக்கெட் ஜெராக்ஸ் பிரதிசான்றொப்பம் பெறப்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்)‘டிடி’ மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் சிறப்பு ஒதுக்கீட்டு படிவம் (தேவைப்பட்டால்)சுய விலாசமிட்ட அஞ்சல் உறை இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள்: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள தேர்வு மையத்தில், பொறியியல் கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங் தினத்தன்று, மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வர வேண்டும். தினசரி ஒவ்வொரு பிரிவு கவுன்சிலிங்கின் முடிவில் காலியிட விவரங்கள், அண்ணா பல்கலைக் கழக இணையதளத்தில் ( www.annauniv.edu ) வெளியிடப்படும். கடந்த இரண்டு ஆண்டு கவுன்சிலிங்கின்போது, எவ்வளவு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு எந்தெந்த கல்லூரிகளில், எந்த பாடப்பிரிவில் இடம் கிடைத்தது என்ற விவரம் கல்விமலர் ( http://www.kalvimalar.com/tamil/TNEA2008/Anna-Univ-TNEA-cutoff.asp ) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. * கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் வங்கி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருக்கும். கவுன்சிலிங்கிற்கு வரும் எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் 1,000 ரூபாயும், இதர மாணவர்கள் 5,000 ரூபாயும் கவுன்சிலிங் முன்பணமாக கட்ட வேண்டும். கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் இப்பணத்தை வங்கி கவுன்டரில் கட்டி, கவுன்சிலிங் படிவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். * குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு வரவேண்டிய மாணவர்கள் ஒலிபெருக்கி மூலம் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். மாணவருடன், பெற்றோர் அல்லது உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவர். முதலில் கவுன்சிலிங் விளக்க அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைமுறைகள் இரு பெரிய திரைகளில் விளக்கப்படும். மேலும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை எந்த வரிசையில் அடுக்கி வைத்து எடுத்து வர வேண்டும் என்பதும் தெரிவிக்கப்படும். அதன்படி, மாணவர்கள் சான்றிதழ்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். * இதற்கடுத்து, சான்றிதழ் சரிபார்க்கும் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். மாணவர்கள் கொண்டு வரும் சான்றிதழ்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை கண்டறிய நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருக்கும் மதிப்பெண்கள் உள்ளிட்ட தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என்பது சரிபார்க்கப்படும். * அடுத்தகட்டமாக, கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும். கவுன்சிலிங் அறையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் முன், வரிசை அடிப்படையில் மாணவரும் அவரும் ஒரு நபரும் அமர வைக்கப்படுவர். ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கு அருகிலும் ஒரு உதவியாளரும் இருப்பார். அந்த உதவியாளர் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய உதவுவார். அவரது உதவியுடன் காலியாக உள்ள இடங்களில், மாணவர்கள் தாங்கள் எந்தக் கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் சேர விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஒவ்வொரு மாணவர்களாக, தாங்கள் சேர வேண்டிய கல்லூரி, பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால், ஒவ்வொரு மாணவர்களுக்கும் அவர்களுக்கு உரிய கல்லூரி, பாடப்பிரிவு கண்டிப்பாக கிடைக்கும். * கவுன்சிலிங்கில் இடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள், கவுன்சிலிங் நடக்கும் கட்டடத்தின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு சென்று, தங்களுக்கான இடஒதுக்கீட்டு கடிதத்தை (Allottment Letter) பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்த பொறியியல் கல்லூரி மற்றும் தேர்வு செய்த பாடப்பிரிவு தான் இடஒதுக்கீட்டுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். * அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல கல்லூரிகளிலும் மாணவர்களிடம் மருத்துவ தகுதிச் சான்றிதழ் கோரப்படுகிறது. இடஒதுக்கீட்டு கடிதத்தை பெற்ற பிறகு, தேவைப்படும் மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு சென்று மருத்துவ தகுதிச் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும். தகவல் மையம்: பொறியியல் கவுன்சிலிங் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தை ‘044 - 22358265, 66, 67, 68’ ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த தகவல் மையம் தினசரி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.