உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் நல ஆலோசகர்

மனஅழுத்தம், சோர்வு, படிப்பதில் உள்ள குறைபாடுகள், குடும்ப பிரச்சனைகள் மற்றும் படிப்பின் மீதான பயம் போன்ற காரணங்களால் பல குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை தேவைப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் நல ஆலோசகர் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், மனநல ஆலோசகரிடம், ஆலோசனை பெறுவதில் குற்ற உணர்வு இருப்பதாக கருதப்பட்டது. தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. அனைத்து தரப்பினரும் ஆலோசனை பெறுவதை, நல்ல விஷயமாகவே கருதுகின்றனர். ஆலோசனை என்பது அறிவுரையாக இருக்கக் கூடாது. நல்லது எது? கெட்டது எது? என்பதை மட்டும் எடுத்துரைப்பதாகவும் இருக்கக் கூடாது. குழந்தைகளின் நடவடிக்கைகளில் என்ன மாற்றம் தேவையோ, அதை மட்டும் எடுத்துக் கூறுவதாக, இருக்க வேண்டும். மனநல ஆலோசகர்களால் குழந்தைகள், பிற்காலத்தில் நல்ல குடிமக்களாக உருவாக முடியும். குழந்தைகள் நல ஆலோசகர் பணியில் ஆர்வமுள்ளவர்கள், உளவியல் படிப்புகளை படிப்பதன் மூலம் மனநல ஆலோசகர் ஆகலாம். தகுதிகள்: பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை படித்தவர்கள், உளவியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். உளவியலில் பட்ட மேற்படிப்பு, எம்.பில்., பிஎச்.டி., போன்ற படிப்புகளை பயின்று மன நல ஆலோசகர் ஆக முடியும். குழந்தைகள் நல ஆலோசகர்கள் பணியில் ஈடுபட ஆர்வமும், சில தகுதிகளும் தேவை. நல்ல தகவல் தொடர்புத்திறனும், கவனிக்கும் திறனும் இப்பணிக்கு முக்கியத் தேவை. குழந்தைகளின் உள் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறனும் வேண்டும். குழந்தைகளுடன் நன்கு பழகி, அவர்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டியதும் அவசியம். குழந்தைகளின் போக்கை நன்கு தெரிந்து கொண்டு அவர்களிடம் ஒன்றிப் பழகி, அவர்களின் குறைகளை அவர்களிடமே கேட்டறியும் திறனும் தேவை. மெல்லிய மனது இருக்க வேண்டும், அதே சமயத்தில் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடாது. மேலும் ஒழுக்க நெறி சார்ந்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் மன நல ஆலோசகர்களுக்கு இன்றியமையாத ஒன்று.  படிப்புகள்: மன நல ஆலோசகர் பிரிவில் டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பட்டமேல் படிப்புகள் காணப்படுகின்றன.*  பி.எஸ்சி., ( உளவியல்)* பி.ஏ., (உளவியல்)* எம்.எஸ்சி., ( உளவியல்)* எம்.ஏ., (உளவியல்)*  எம்.பில்.,*  பிஎச்.டி., கல்வி நிறுவனங்கள்:*  டில்லி பல்கலைக்கழகம், டில்லி *  இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், டில்லி*  கோல்கட்டா பல்கலைக்கழகம், மேற்குவங்கம்*  குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ்*  பெங்களூரு பல்கலைக்கழகம், பெங்களூரு*  கேரளா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்*  குஜராத் பல்கலைக்கழகம், ஆமதாபாத்*  சென்னைப் பல்கலைக்கழகம், சென்னைஆகிய பல்கலைக்கழகங்களில் உளவியல் பாடப்பிரிவுகள் காணப்படுகின்றன. வேலைவாய்ப்புகள்:குழந்தைகள் நல ஆலோசகர்களுக்கு தற்போது சிறப்பான பணி வாய்ப்புகள் காணப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் இவர்களுக்கு, நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பு உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளிலும், இவர்களுக்கு பணிவாய்ப்புகள் காணப்படுகின்றன. மனநல ஆலோசகர்கள் தனியாக கிளினிக் வைத்து நடத்துவதன் மூலம் சிறப்பான வருமானத்தை பெற முடியும். இவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் பள்ளிகளிலும், குழந்தைகள் நல ஆலோசகர்கள் தேவை அதிகரித்துள்ளது. மனநல ஆலோசகர்களுக்கு, ஆரம்ப கால ஊதியம் ரூபாய் 17 ஆயிரம் முதல் வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !