இசையில் பட்டப்படிப்புகள்
மதுரையில் உள்ள ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம் இசைக்கல்லூரி மாணவர்களுக்கு, இசையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இக்கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. இசைத்துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பள்ளிகள், இசைப் பள்ளிகள், இசைக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை கல்லூரிகளில் உள்ள இசைத்துறைகள் ஆகியவற்றில் ஆசிரியர் மற்றும் பேராசிரியராக பணியில் அமரலாம். இசை மற்றும் நாட்டியப்பள்ளிகளை சொந்தமாக துவக்கலாம். வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள், மெல்லிசைக்குழுக்கள், சினிமாத்துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியலாம். தற்போது மிகவும் பிரபலமாகி வரும் ஒரு நோய் சிகிச்சை முறை மியூசிக்தெரபி. அதில் இத்துறை முடித்தவர்களுக்கான வாய்ப்புகள் அதிகம். சவுண்ட் இன்ஜினியரிங், ரெக்கார்டிங், இசைக்கருவிகள் தயாரித்தல் போன்ற துறைகளில் இசைத்துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு, வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கு பெற தகுதி உண்டு. இக்கல்லூரியில் உள்ள படிப்புகள் இளநிலை பட்டப்படிப்பு பி.ஏ., (இசை) : மூன்று ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்த பட்டப்படிப்பில் வாய்ப்பாட்டு / வீணை முக்கியபாடமாகவும், வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவை துணைப்பாடமாகவும் கற்றுத்தரப்படுகின்றன. முதுநிலை பட்டப்படிப்பு: எம்.ஏ.,(இசை): இரண்டு ஆண்டுகள் கால அளவு கொண்ட இந்த பட்டப்படிப்பு வாய்ப்பாட்டு / வீணையை முக்கியபாடமாகவும், வயலின், மிருதங்கம், பரதநாட்டியம் ஆகியவற்றை துணைப்பாடமாகவும் கொண்டது. இக்கல்லூரியில் முதுநிலபட்டம் பெற்ற மாணவர்களுக்காக 1 ஆண்டு கால அளவு கொண்ட எம்.பில்., பட்டப்படிப்பும் உள்ளது. தகுதிகள்: * பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசையில் நாட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும். * எம்.ஏ.,பட்டம் பெற விரும்பும் மாணவர்கள், ஏதேனும் பல்கலைக்கழகத்தில், பி.ஏ.,(இசை) பட்டப்படிப்பு அல்லது பி.ஏ.,/பி.எஸ்.சி.,/பி.காம்., பட்டப்படிப்புடன் இசையில் டிப்ளமோ படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். * எம்.பில்.,படிப்பில் சேர ஏதேனும் பல்கலைக்கழகத்திலிருந்து இசையில் எம்.ஏ.,பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பங்களை பெற: ஸ்ரீஸத்குரு ஸங்கீத வித்யாலயம், 15ஏ கோகலே ரோடு, தல்லாகுளம், மதுரை 625 002. போன்: 0452 2530 957