உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் சிறப்பாக செயல்பட...

மாணவர்கள் படிப்பு மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட மிகவும் கஷ்டப்பட தேவையில்லை. கீழே கூறியுள்ளவற்றை பின்பற்றினாலே போதும். மாணவர்கள் படிக்கும் பாடத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்துக் கொள்வதைவிட, சில குறிப்புகளால் மனதில் வைத்துக் கொண்டால் அவை எளிதில் மறக்காது. கவனம் சிதறாமல் இருக்க தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் உறங்குவது அவசியம். எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் ஞாபக சக்திஅதிகரிக்கும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபட்டால் புத்துணர்ச்சி யுடன் செயல்பட முடியும். உணவுப் பொருட்களில் பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அதிக எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. இவை மட்டுமல்லாமல் நல்ல சுற்றுச்சூழலும், அமைதியான குடும்ப பின்னணியும், நல்ல நண்பர்களையும் கொண்டிருப்பது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும். மாணவர்கள் தாங்களாவே முன் வந்து மற்றவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம், தாங்களும் உற்சாகமாக இருக்கலாம். ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ள அந்த விஷயத்தை பற்றிய தகவல்களை கவனித்து கேட்க வேண்டும். பேசுவதை விட கேட்பதில் தான் அதிக பயன் இருக்கிறது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பணியையும் முழு திருப்தியுடன் செய்து முடிக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையையும்,சமாளிக்கக்கூடிய மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !