உள்ளூர் செய்திகள்

சில்லரை வியாபார நிர்வாகம்

பெயரிலிருந்தே இத்துறைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம். சந்தை வணிகம் என்பதை எப்படி நிர்வகிக்கலாம் என்பதை படிப்பதற்காக பல சிறப்பு படிப்புகள் தற்போது கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அவற்றுள் சில்லரை வாணிபம் தொடர்பான நிர்வாகவியலை படிக்கும் படிப்பு தான் சில்லரை வியாபார நிர்வாகம் (ரீடெயில் மேனேஜ்மென்ட்). தொழிற்சாலைகளில் தயார் செய்யப் படும் பொருட்களானது மக்களின் தேவை, தரம், உரிய விளம்பரம், திட்டமிடல், விற்பனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கடந்து மொத்த வியாபாரிகளிடம் சென்றடைகிறது. அவர்களிடமிருந்து சில்லரை வியாபாரிகளுக்கு செல்லும். பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். ஒரு பொருளை தயார் செய்யும் நிறுவனத்தின் வெற்றி என்பது சில்லரை வியாபாரத்தை பொறுத்தே உறுதி செய்யப்படுகிறது. பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதோடு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், பல சலுகைகள், ஊக்கத்தொகைகள், பரிசுப் போட்டிகள் போன்றவற்றை நடத்துவது சில்லரை வியாபாரத்தின் மார்க்கெட்டிங் நுட்பமாகும். சில்லரை வியாபாரத்தில், விற்பனையாளர்களை பணியமர்த்துவது, சரக்குகளை கையிருப்பில் வைத்தல், அதை பாதுகாத்தல், வியாபார கணக்குகளை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் உள்ளன. சிறிய கடைகளிலிருந்து, பெரிய அளவிலான சூப்பர் ஸ்டோர் முடிய இந்த நடவடிக்கைகள் கடை பிடிக்கப்படும். பிக்பஜார், ரிலையன்ஸ்,டெஸ்கோ, ஷாப்பர்ஸ் ஷாப் உள்ளிட்ட பல பெரிய நிறுவனங்கள் தற்போது இந்த சில்லரை வியாபாரத்துறையில் கால் பதித்துள்ளன.  ஆகவே இத்துறைக்கான பணிவாய்ப்புகள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த துறையானது, நிர்வாகத்தை பொறுத்த வரையில் இரண்டு அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கின்றன. ஒன்று, தயாரிப்பாளர்களிடமிருந்து பொருட்களை வாங்குவது, மற்றொன்று, வாங்கிய பொருட்களை மக்களிடம் சேர்ப்பது. இத்துறையில் படிப்பை முடித்தவர்கள் ஸ்டோர் மேனேஜ்மென்ட், மெர்க்கண்டைசிங், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட பலதுறைகளில் பணி வாய்ப்பை பெறலாம். பயிலும் நிறுவனங்கள்* பிர்லா மேலாண்மை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், புதுடில்லி (bimtech.ac.in)* வெலிங்கர் மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.pearlacademy.com)* பியர்ல் அகாடமி ஆப் பேஷன், புதுடில்லி (www.indianretailschool.com)* இந்தியன் ரீடெயில் பள்ளி, புதுடில்லி (www.indianretailschool.com)* கே.ஜே.சவுமியா மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.mecindia.com)  * மெட்ரோபொலிடன் மேலாண்மை கல்வி நிறுவனம், புனே www.mecindia.com) * எஸ்.பி. ஜெயின் மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை (www.spjimr.org) வேலைவாய்ப்புஇத்துறையில் படிப்பை முடித்தவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள பெரிய நிறுவனங்களில் மேனேஜர் உள்ளிட்ட பணியில் அமரும் வாய்ப்புகள் உள்ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !