முழுமை பெறுமா ஆர்.டி.இ.,
கல்விக்கான உரிமை சட்டம் ஆர்.டி.இ., (ரைட் டூ எஜூகேசன்) பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் சட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் சரியாக நிறைவேற்றுமா என்ற கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. உத்தரபிரதேசம் போன்ற சில மாநிலங்கள் இந்த சட்டத்தை நிறைவேற்ற மாநில அரசிடம் போதிய நிதியில்லை என்று கைவிரித்துள்ளது மேலும் மத்திய அரசு தான் 100 சதவீத நிதியுதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அம்மாநில அரசு விடுத்துள்ளது. இதற்கு மத்திய மனிதவள அமைச்சர் கபில்சிபல் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அனைத்து மாநிலங்களும் அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்து ஆர்.டி.இ., சட்டம் 100 சதவீதம் முழுமை பெற நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டத்தை இயற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் தான் அரசின் சாதனை அடங்கியுள்ளது. எனவே இதுபோன்ற நாட்டு நலன் சார்ந்த முக்கிய சட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைய மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.