ஏழுமலையான் சேவையில் பெங்களூருவைச் சேர்ந்த ஐ.ஐ.எம்.,
(இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்) திருமலை திருப்பதி தேவஸ்தான பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. முன்னதாக ஆந்திர மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன் கோயில் நிர்வாகம் கொடுத்த காலக்கெடுவில் தங்களால் பணியாளர்களை தேர்வு செய்ய இயலாது என்று இந்த பணியை நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் ஆயிரத்து எண்ணூறு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.