பயோஇன்பர்மேடிக்ஸ்
மூலக்கூறு உயிரியல் துறையில் புள்ளியியல் மற்றும் கம்ப்யூட்டர் நுட்பங்களை புகுத்தும் துறை பயோஇன்பர்மேடிக்ஸ் எனப்படும். 1979ஆம்ஆண்டு பாலின் ஹோக்வேக் என்பவர் உயிரமைப்புகளின் தகவல் செயல்முறைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் போது பயோஇன்பர்மேடிக்ஸ் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். இத்துறையானது, தரவுத்தளத்தை(டேடா பேஸ்) உருவாக்கி பாதுகாத்தல், கணக்கீடு, கம்ப்யூட்டர் மற்றும் புள்ளியியல் தொழில்நுட்பங்கள், பகுப்பாய்வுகள், உயிரியல் குறியீடுகளை ஆய்வு அல்லது நிர்வகிக்கும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்த்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் இன்றியமையாததாக விளங்குகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஜீனோமிக் மற்றும் மூலக்கூறு ஆய்வுத் தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி ஆகியவை மூலக்கூறு உயிரியல் சார்ந்த தகவல்களை அதிக அளவில் உருவாக்கியிருக்கின்றன. பயோஇன்பர்மேடிக்ஸ் துறையானது நியூக்ளியோடைடுகள் மற்றும் அமினோஅமிலங்களின் ஜீனோமிக் சுழற்சியின் ஆரம்பத்தில் உள்ள தகவல்களை சேமிப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் ஏற்ற டேடா பேஸ்களை உருவாக்க பயன்படுகிறது. கம்ப்யூட்டரின் உதவியோடு உயிரியல் தகவல்களைத் தேடுவது, சீக்வன்ஸ்களை ஒப்பிடுவது, புரொட்டீன்களின் அமைப்பை பரிசோதிப்பது, கடினமான உயிரியல் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளிப்பது போன்ற அம்சங்களை பயோஇன்பர்மேடிக்ஸ் தருகிறது. எனவே பல ஆண்டு கடின முயற்சிக்குப் பின் தான் கண்டறியக்கூடிய உயிரியல் அம்சங்களை சில நிமிடங்களிலோ சில மணி நேரங்களிலோ பயோஇன்பர்மேடிக்ஸ் தந்து விடுகிறது என்பதே உண்மையாகும். இத்துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் பி.எச்.டி.,படிப்புகள் உள்ளன. நிறுவனங்கள்*மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை (www.mkuniversity.org) * சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in) * பாரதியார் பல்கலைக்கழகம், கோவை (www.bu.ac.in) * பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (www.bdu.ac.in) * பெரியார் பல்கலைக்கழகம், சேலம் (www.periyaruniversity.ac.in) * எஸ்.ஆர்.எம்.,பல்கலைக்கழகம், சென்னை (www.srmuniv.ac.in) * ஐ.பி.ஏ.பி.,பெங்களூரு (www.ibab.ac.in) * ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், புதுடில்லி (www.jmi.nic.in)) * டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை (www.mgrjanaki.ac.in) * பயோஇன்பர்மேடிக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, நொய்டா (www.bii.in) * பயோஇன்பர்மேடிக்ஸ் சென்டர், புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி (www.bicpu.edu.in) * புனே பல்கலைக்கழகம், புனே (www.unipune.ac.in) வேலைவாய்ப்புகள்இத்துறையில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. பார்மா நிறுவனங்கள், பயோடெக்னாலஜி தொடர்பான நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் பணியில் அமரலாம். மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வுப் பணியில் இத்துறை வல்லுநர்களை ஈடுபடுத்துகின்றன. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் பணிபுரியலாம். இத்துறையில் முதுநிலை படிப்பை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.