ஆந்த்ரபாலஜி படிக்க...
மனித இனம் பற்றி முழுமையாக படிக்கும் துறை மானுடவியல். இத்துறை சார்ந்த படிப்புகள் பல கல்வி நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. அவற்றின் பட்டியலை இங்கு காண்போம். * ஐ.எஸ்.இ.சி., (சமூகம் மற்றும் பொருளாதார மாற்றம் படிக்கும் கல்விநிறுவனம்), பெங்களூரு இங்கு பிஎச்.டி.,பிரிவில் சோசியல் ஆந்த்ரபாலஜி படிப்பு வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு www.isec.ac.in * உத்கல் பல்கலைக்கழகம், புவனேஸ்வர் இங்கு மானுடவியல் துறையில் எம்.ஏ.,, எம்.எஸ்.சி.,, எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் உள்ளன.விவரங்களுக்கு www.utkal-university.org/ * புனே பல்கலைக்கழகம், புனே இக்கல்வி நிறுவனத்தில் மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கைநடைபெறும். விவரங்களுக்கு www.unipune.ac.in * ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐதராபாத் இரண்டு ஆண்டு எம்.ஏ., ஒரு வருட எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,படிப்புகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன.விவரங்களுக்கு www.uohyd.info * சாம் ஹிக்கீன்பாதம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், அலகாபாத் முன்னதாக, இக்கல்விநிறுவனம் அலகாபாத் வேளாண்மை கல்வி நிறுவனம் என அழைக்கப்படும். இங்கு மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது. விவரங்களுக்கு www.aaidu.org * மைசூர் பல்கலைக்கழகம், மைசூர் இப்பல்கலை.,யில் மானுடவியலில் எம்.எஸ்.சி.,படிப்பு உள்ளது. விவரங்களுக்கு www.uni-mysore.ac.in/