உள்ளூர் செய்திகள்

கப்பல் கட்டுமானம் படிக்க...

உலகில் உள்ள 70 சதவீத பயணிகள் கப்பல்கள் இந்திய கடல் வழியாக கடந்து செல்கின்றன. கப்பல் கட்டுமானம் (Naval Architecture) தொடர்பான படிப்புகளுக்கு வரவேற்பு அதிகம் காணப்படுகிறது. அதை கற்றுத்தரும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இங்கு காண்போம். * ஐ.ஐ.டி.,,சென்னை பி.இ.,பிரிவில் கப்பல் கட்டுமானம் மற்றும் ஓசன் இன்ஜினியரிங் படிப்பு வழங்கப்படுகிறது. ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.  விவரங்களுக்கு oec.iitm.ac.in * ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் பி.இ., கப்பல் கட்டுமானம் படிப்பு இக்கல்வி நிறுவனத்தால் கற்றுத்தரப்படுகிறது. விவரங்களுக்கு andhrauniversity.info * ஐ.ஐ.டி.,, காரக்பூர் இக்கல்வி நிறுவனத்தால் பி.இ., மற்றும் எம்.டெக்.,பிரிவுகளில் கப்பல் கட்டுமானம் மற்றும் ஓசன் இன்ஜினியரிங் படிப்புகள் வழங்கப்படுகின்றன. ஐ.ஐ.டி.,ஜே.இ.இ., நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு www.iitkgp.ac.in * கடற்படை இன்ஜினியரிங் கல்லூரி, புனே இக்கல்வி நிறுவனம் இந்திய கடற்படையால் நடத்தப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தில் பி.டெக்., கப்பல் கட்டுமானம் படிப்பு உள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டமும், இந்திய கடற்படையிலிருந்து அங்கீகாரமும் பெறுவார்கள். விவரங்களுக்கு www.insshivaji.edu.in * கப்பல்கட்டுமானம் கல்வி நிறுவனம், கோவா கப்பல் கட்டுமானம் தொடர்பான நான்கு வருட டிப்ளமோ படிப்பு இங்கு உள்ளது. விவரங்களுக்கு isbt.ac.in * கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொச்சி இங்கு பி.டெக்.,பிரிவில் கப்பல் கட்டுமான படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. விவரங்களுக்கு shiptech.cusat.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !