டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிக்க...
படித்தவுடன் வேலைவாய்ப்பு அளிக்கும் துறைகளில் ஒன்று டெக்ஸ்டைல் டெக்னாலஜி. சுயதொழில் விருப்பம் உள்ளவர்களுக்கு இத்துறை கைகொடுக்கும். இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களை காண்போம். * ஐ.ஐ.டி.,, புதுடில்லி இக்கல்வி நிறுவனம் பி.டெக்.,, எம்.டெக்.,, மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை வழங்கி வருகிறது.விவரங்களுக்கு www.iitd.ac.in * சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேஷனல் டெக்ஸ்டைல் மற்றும் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம், கோவைஇங்கு இரண்டு வருட முதுநிலை டிப்ளமோ படிப்பில் இத்துறை சார்ந்த படிப்பு வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு svpitm.co.in * குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெற்ற இக்கல்வி நிறுவனம், பி.டெக்.,, எம்.டெக்.,, மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி தொடர்பான படிப்புகளை கற்றுத்தருகிறது. விவரங்களுக்கு kct.ac.in * டெக்ஸ்டைல் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், பிவானி டெக்ஸ்டைல் டெக்னாலஜி மற்றும் வேதியியல் என்ற பி.டெக்., மற்றும் எம்.டெக்.,படிப்புகள் இங்குள்ளன. விவரங்களுக்கு titsbhiwani.ac.in * டி.கே.டி.இ.,டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் கல்வி நிறுவனம், கோல்காபூர் இங்கு இத்துறை தொடர்பான பல வகை படிப்புகள் பி.டெக்., மற்றும் எம்.டெக்.,பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. விவரங்களுக்கு www.dktes.com