உள்ளூர் செய்திகள்

பயோ கெமிஸ்ட்ரி படிக்க..

உயிரினங்களில் நிகழும் வேதியியல் தொடர்பான மாற்றங்களை படித்து ஆராயும் அறிவியல் துறை உயிர்வேதியியல் எனப்படும். நம் நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் இத்துறை சார்ந்த படிப்புகள் அதிக அளவில் கற்றுத்தரப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை காண்போம். * ஜிப்மர், புதுச்சேரிஇக்கல்வி நிறுவனத்தில் மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி என்ற இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு உள்ளது. இக்கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு: www.jipmer.edu * எய்ம்ஸ், புதுடில்லிஇங்கு பிஎச்.டி.,யில் கார்டியாக் பயோகெமிஸ்ட்ரி, நியூரோ பயோகெமிஸ்ட்ரிஉள்ளிட்ட பல படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. எம்.டி., அல்லது எம்.எஸ்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.aiims.edu * சென்னை பல்கலைக்கழகம், சென்னை இப்பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி., மற்றும் எம்.பில்.,பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.unom.ac.in *  பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி இப்பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியலில் முதுநிலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு www.bdu.ac.in * கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி, வேலூர் இங்கு இரண்டு வருட கால அளவு கொண்ட எம்.டி., மற்றும் எம்.எஸ்.சி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. நுழைவுத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விவரங்களுக்கு: home.cmcvellore.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !