இக்னோ கிராமியக்கலை படிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ), பண்பாடு மற்றும் கிராமியக்கலையில் பி.ஜி., டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இந்த ஒரு ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்திருப்பது அவசியம். மேலும் விபரங்களுக்கு www.ignou.ac.in/ மலேசிய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் இந்தியாவில் வரும் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ படிப்பை படிக்க விரும்பும் மலேசிய மாணவர்களுக்கு இந்திய அரசு ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. நாட்டில் உள்ள 14 கல்வி நிறுவனங்கள் 4 விதமான படிப்புகளுக்கு இச்சலுகை பொருந்தும். * ஆயுர்வேதா, மெடிசன் அண்ட் சர்ஜரி,* சித்தா மெடிசன் அண்ட் சயின்சஸ், * யுனானி மெடிசன் அண்ட் சர்ஜரி,* ஹோமியோபதி மெடிசன் அண்ட் சர்ஜரி