வெளிநாட்டில் எம்.பி.ஏ.,
மேலாண்மை பட்டப்படிப்பை வெளிநாட்டில் படிக்க திட்டமிடும் மாணவர்கள், சிறந்த கல்வி நிறுவனங்கள், அங்கு வழங்கப்படும் பாடத்திட்டங்கள் மற்றும் சேர்க்கை முறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்வது அவசியம்! அமெரிக்காஉலக வர்த்தகத்திற்கு ஏற்ப, மேலாண்மை துறை பிரிவு வல்லுநர்கள் வடிவமைத்த பாடத்திட்டம், உள்கட்டமைப்பு வசதி, தொழில்முறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி, நிறுவன நடைமுறை பயிற்சி, இன்டர்ன்ஷிப் என மாணவர்களுக்கு தரமான மேலாண்மை கல்வியினை வழங்க, அமெரிக்க பி-ஸ்கூல் கல்வி நிறுவனங்களுக்கு நிகர் வேறு எதுவுமில்லை. பிரபல கல்வி நிறுவனங்கள்: சிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் ஸ்கூல் ஆப் பிசினஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல், நார்த்வெஸ்டன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் பிசினஸ் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் போன்ற கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. சேர்க்கை முறை: இங்குள்ள கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ‘ஜிமேட்’ தகுதி தேர்வு, ஆங்கில மொழி புலமை தேர்வான ’டோபல்’ அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில், சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். படிப்பு காலம்: பொதுவாக இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்து நிதி வர்த்தகம், வணிகம் மற்றும் வங்கி துறையில் பிரதான இடம் பிடித்திருக்கும் வெளிநாடுகளின் பட்டியலில் முக்கியத்துவமாக கருதப்படும் நாடு இங்கிலாந்து! சிறந்த பாடத்திட்டங்களுடன் கூடிய சவாலான கல்வி முறை, தொழில்முனைவோராகும் வாய்ப்பு மற்றும் பட்டப்படிப்பை முடித்தவுடன் உயர்ந்த சம்பளத்தில் வேலை, என மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கும், சர்வதேச புகழ் பெற்ற வணிகப் பள்ளிகள் ஏராளம். பிரபல கல்வி நிறுவனங்கள்: லண்டன் பிசினஸ் ஸ்கூல், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிகல் சயின்ஸ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், வார்விக் பிசினஸ் ஸ்கூல், மான்செஸ்டர் பிசினஸ் ஸ்கூல், இம்பீரியல் பிசினஸ் ஸ்கூல், எடின்பர்க் மேலாண்மைப் பள்ளி மற்றும் கரான்பீல்ட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு மேலாண்மை கல்வியில் சிறந்த செயல்முறை பயிற்சிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. சேர்க்கை முறை: ’ஜிமேட்’, ’டோபல்’ அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. படிப்பு காலம்: ஓர் ஆண்டு கனடாஉலகின் மிகப்பெரிய மற்றும் செல்வாக்கு நிறைந்த வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள நாடு கனடா! பொருளாதாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கம், உற்பத்தி, விவசாயம் போன்ற தொழில்களில் செழித்து இருக்கும் கனடாவில், மேலாண்மை படிப்பை தொடர்வதன் மூலம் இத்துறையில் உள்ள நடப்பு நிகழ்வு நுணுக்கங்களை கற்று கொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் பெறுகின்றனர். பிரபல கல்வி நிறுவனங்கள்: டொராண்டோ பல்கலைக்கழகம், யார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்குலிக்கின் பிசினஸ் ஸ்கூல், குயின்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் ஸ்கூல், செயின்ட் ஜான் பிசினஸ் ஸ்கூல், மெக்கில் பல்கலைக்கழகத்தின் டெசடல்ஸ் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஐவே பிசினஸ் ஸ்கூல் போன்ற கல்வி நிறுவனங்கள் சிறந்த கல்வியை வழங்கி, பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை உருவாக்கி தருகின்றன. சேர்க்கை முறை: ‘ஜிமேட்’, டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆஸ்திரேலியா தரத்தில் சமரசம் இல்லாத தரமான கல்வியை வழங்கும் சிறந்த நாடு! அறிவியல், பொறியியல் போன்ற துறைகளில் வழங்கப்படும் ஆராய்ச்சி வழி கல்வியை மேலாண்மை துறையிலும் உட்புகுத்தி, வணிக நடைமுறைக்கு ஏற்றாற்போல் புதிய வகை பாடத்திட்டங்களை கொண்டு சிறந்த மேலாண்மை கல்வியை இந்நாட்டு கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பிரபல கல்வி நிறுவனங்கள்: மெல்போர்ன் பிசினஸ் ஸ்கூல், ஆஸ்திரேலிய ஸ்கூல் ஆப் பிசினஸ், சிட்னி பிசினஸ் ஸ்கூல், கர்டின் பிசினஸ் ஸ்கூல், குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மொனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் மக்வாரி கிராஜுவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. சேர்க்கை முறை: ’ஜிமேட்’ தகுத்தேர்வில் 550க்கு மேல் ’கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். மேலும், ஐ.இ.எல்.டி.எஸ்., அல்லது ’டோபல்’ ஆகிய மொழிப்புலமைத் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் மட்டுமே இங்கு சேர்க்கை பெற முடியும். சிங்கப்பூர்உலக நாடுகளே வியந்து பார்க்கும் அளவிற்கு, தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து பிரிவிலும் சிறப்பாய் செயல்படும் நாடு சிங்கப்பூர். அங்கு, வழங்கப்படும் உயர்கல்வி பாடத்திட்டத்தில் செயல்முறை பயிற்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மாணவர்கள் தொழில் நடைமுறைகளுக்கு ஏற்றவாறு தங்களை பக்குவப்படுத்தி கொண்டு திறம்பட செயலாற்ற உதவுகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள்: நன்யாங் பிசினஸ் ஸ்கூல், நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர், இன்சியாட், லிவர்பூல் பல்கலைக்கழகம் மற்றும் ஜே.இ., கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள், நவீனத்துவமான மேலாண்மை கல்வியை வழங்கி வருகின்றன. இங்கு, படிக்க தோராயமாக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவிட வேண்டும். சேர்க்கை முறை: ஜி.மேட்., அல்லது ஜி.ஆர்.இ., மற்றும் மொழிப்புலமை தேர்வுகளில் ‘டோபல்’ அல்லது ’ஐ.இ.எல்.டி.எஸ்.,’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஸ்பெயின்தரமான கல்வியை வழங்கும் ஐரோப்பிய நாடுகளின் பட்டியலில், ஸ்பெயின் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. மாட்ரிட் மற்றும் பார்சிலோனா பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் மேலாண்மை பட்டப்படிப்பு சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், ஸ்பெயினின் வேறுபட்ட கலாச்சாரம் மாணவருக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்குகிறது. சிறந்த கல்வி நிறுவனங்கள்: இ.யூ.,பிசினஸ் ஸ்கூல், இ.எஸ்.ஏ.டி.இ.,பிசினஸ் ஸ்கூல், ஜெனிவா பிசினஸ் ஸ்கூல், நவார்ரா பல்கலைக்கழகம் மற்றும் பார்சிலோனா பல்கலைக்கழகம் போன்றவை, மேலாண்மை கல்வியில் வர்த்தகம் மற்றும் வணிக நிர்வாக மேம்பாடு, நடைமுறை செயலாக்கம் உள்ளிட்ட பாடங்களை நேர்த்தியாக வழங்குகின்றன. சேர்க்கை முறை: ஜி.மேட்., அல்லது ஜி.ஆர்.இ., மற்றும் ’டோபல்’ அல்லது ’ஐ.இ.எல்.டி.எஸ்.,’ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையி மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், இங்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடனான வகுப்பறை உரையாடல்கள், ஸ்பானிஷ் மொழியில் இருக்கும் என்பதால் ஸ்பானிஷ் மொழியை கற்றுக்கொள்வது அவசியம்.