பாடப்பிரிவில் ஏற்றத்தாழ்வு இல்லை!
நம் நாட்டின் முதுகெழும்பாக கிராமங்கள் திகழும் நிலையில், அத்தகைய கிராமப்புறங்களில் கல்வியறிவை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில், காங்கேயத்தில் கடந்த 1989ம் ஆண்டு முதல் கல்லூரியை துவக்கினோம். அக்கல்லூரியில் படித்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்று பல்வேறு முன்னனி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அடுத்ததாக, சுகாதார துறையில் உள்ள தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நர்சிங், பிசியோதெரபி, துணை மருத்துவ படிப்புகளை வழங்கும் கல்லூரிகளையும் துவக்கினோம். தற்போது, இக்கல்வி குழுமத்தின் கீழ், 8 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன.பாகுபாடு வேண்டாம்இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் துறை பிரமாண்ட வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், ஊதியமும் அதிகம் என்பதால், இன்று பெரும்பாலான மாணவர்கள் இத்துறை சார்ந்த படிப்புகளை தேர்வு செய்கின்றனர். கம்ப்யூட்டர் துறைக்கு எவ்வாறு திறன் படைத்தவர்கள் தேவைப்படுகிறோர்களோ அதேபோல், பாரம்பரிய பொறியியல் படிப்புகளை படித்த இன்ஜினியர்களுக்கும் தேவை அதிகரித்து வருகிறது. ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் பெரும் வளர்ச்சி காணும் அதே தருணம், செமிகன்டக்டர், சிப் உற்பத்தி செய்யும் பொறியியல் நிறுவனங்களிலும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல், செவிலியர் உட்பட துணை மருத்துவ படித்தவர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. இவ்வாறு, அனைத்து துறைகளிலுமே திறன் படைத்தவர்கள் தேவைப்படும் சூழலில், ஒரு படிப்பு சிறந்தது, மற்றொரு படிப்பு தாழ்ந்தது என்ற எந்த பாகுபாடும் இல்லை. நம் நாட்டின் வளர்ச்சியில் அனைத்து துறைகளுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் எவ்வளவு அவசியமோ, அதேபோல் சமூகத்திற்காக நேரடியாக சேவையாற்ற செவிலியர்களும், மருத்துவ துறை பணியாளர்களும் அவசியம்.பொதுவாக, சாப்ட்வேர் நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியம் ஒரு மருத்துவ பணியாளருக்கு வழங்கப்படுவதில்லை. இரண்டு பணிகளின் நோக்கமும், பணிதிருப்தியும் மாறுபடுகின்றன. கம்ப்யூட்டர் இன்ஜினியருக்கு ஊதியம் அதிகம்; மருத்துவ பணியாளர்களுக்கு மக்களுக்கு சேவையாற்றும் பணி திருப்தி அதிகம். இவ்வளவு ஏன்... கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரும் நிறுவனங்களில் வழங்கப்படும் ஊதியம் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களில் வழங்கப்படுவதில்லை. ஆனால், அத்தகைய பெரும் நிறுவனங்களில் வேலைக்கான போட்டி மிக அதிகம். வகுப்பறை கல்விடிஜிட்டல் வழிக் கல்வி என்பது எந்த காலத்திலும் வகுப்பறை கல்விக்கு மாற்றாக அமைய முடியாது. ஆன்லைன் வழிக் கல்வி என்பது பாடத்திட்டங்களை கற்பிக்க உதவும் ஒரு வழிமுறையே தவிர, அது வகுப்பறை கல்விக்கு மாற்றாகது. நெறிமுறைகள் மற்றும் சிந்தனை மேம்படுதல், குழுவாக செயல்படுதல் போன்ற பல்வேறு குணநலன்கள் வகுப்பறை வழி நேரடி கல்வி முறையிலேயெ பெரிதும் மேம்படும்.-கார்த்திக் பழனிசாமி, நிர்வாக இயக்குனர், சேரன் கல்வி குழுமங்கள், கோவை.