உள்ளூர் செய்திகள்

வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுல்; வெளியிட்டது கூகுள்!

புதுடில்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு, வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், குடியரசு தினத்திற்கு சிறப்பு டுடூலை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில், வன விலங்குகள் படத்துடன் இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. லடாக் பகுதியின் பாரம்பரிய உடை அணிந்த பனிச்சிறுத்தை உள்ளது. அதன் அருகே, புலி ஒன்று, இரண்டு காலில் நின்று இசைக்கருவியை வாசிக்கிறது. பாரம்பரிய உடையில் ஒரு மான், செல்கிறது. இசைக்கச்சேரிகள் நடக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்