உள்ளூர் செய்திகள்

மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தில்நுால் வெளியீடு, விருது வழங்கல், பாராட்டு விழா

நாமக்கல்:நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், நுால் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என, முப்பெரும் விழா நடந்தது. நிறுவன விரிவுரையாளர் சிவபெருமான் வரவேற்றார். நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து பேசியதாவது:வகுப்பறை செயல்பாடுகளை நுாலாக ஆவணப்படுத்தும்போது, புதுமையான கற்பித்தல் உத்திகள் பரவலாக்கம் செய்ய வாய்ப்பு ஏற்படும். விருது ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. விருதுகள், ஆசிரியர்களை செயலுாக்கம் மிகுந்த கற்பித்தல் பணிகளை செய்ய துாண்டும். எண்ணங்களின் இருப்பிடம் நுால்கள். செயல்களின் பதிவுகளுக்கான மியூசியமே ஆவணங்கள். இந்த இரண்டின் கலவை வடிவமே, ஆசான் கூடுகை -வெற்றிக்கதைகள் நுால்.இவ்வாறு அவர் பேசினார்.ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட, 52 கருத்தாக்க செயல்பாடுகளை, ஆசான் கூடுகை வெற்றிக்கதைகள் என்ற நுாலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நுாலை ரோட்டரி மாவட்ட கல்வி குழுத்தலைவர் வெங்கடேஷ்வர குப்தா, ரோட்டரி மகிழ்ச்சி பள்ளிகளின் தலைவர் கருணாகர பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர். ஆசான் கூடுகை இணையவழியில் பயிற்சி பெற்று, வகுப்பறை வெற்றிக்கதைகளை உருவாக்கிய, 41 பேருக்கு, வகுப்பறை அரசர்-2025 என்ற விருதை, ரோட்டரி மாவட்ட ஆளுனர் சிவக்குமார் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்