உள்ளூர் செய்திகள்

வகுப்பறையின் ஒரு பகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக பள்ளிக் கல்வி செயலர் விசாரணை

மதுரை: மதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறையின் ஒரு பகுதி, பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை நடத்தினார். பின் கல்வி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, "பொதுத்தேர்வில் தேர்ச்சி இலக்கை எட்ட, கல்வி அதிகாரிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஆசிரியர், அதிகாரிகள் கடமைக்கு வந்து செல்லாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்