மாற்று திறனாளி இளைஞருக்கு டூ - வீலர் வாங்கி தந்த கலெக்டர்
மதுரை: மாற்றுத் திறனாளி இளைஞருக்கு, மதுரை கலெக்டர், தன் சொந்த செலவில், இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.மதுரை ஆனையூரைச் சேர்ந்த, காளிமுத்து - மாரீஸ்வரி தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன், மகள், பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொண்டார். 21 வயதான மகன் பழனிகுமார், பிறவிலேயே வாய் பேச முடியாத, நடக்க முடியாத மாற்றுத் திறனாளி.கிடைக்கும் குறைந்த வருவாயை கொண்டு, மகனை வளர்ந்து வந்தனர். இந்நிலையில், மாரீஸ்வரி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். காளிமுத்தும், போதைக்கு அடிமையானார். மகனை யாரை நம்பியும் விட முடியாமல், மாரீஸ்வரி எங்கு சென்றாலும் துாக்கி செல்வார்.&'மகனை துாக்கி செல்ல முடியாததால், இருசக்கர வாகனம் வழங்கினால் உதவியாக இருக்கும்&' என கலெக்டர் அன்பழகனிடம் மனு அளித்தார். அவரது வறுமையை அறிந்த கலெக்டர், சொந்த செலவில், இருசக்கர வாகனம் வாங்கி, மாற்றுத் திறனாளி இளைஞரை அமர வைத்து செல்லும் வகையில், &'சீட் பெல்ட்&'டுடன் கூடிய இருக்கையும் அமைத்து கொடுத்தார்.நேற்று அந்த இருசக்கர வாகனத்தை, மாரீஸ்வரியிடம் ஒப்படைத்த கலெக்டர், பழனிகுமாரை அமர வைத்து தானே கலெக்டர் அலுவலகத்தில், ஒரு ரவுண்ட் ஓட்டி உற்சாகமூட்டினார். கலெக்டரின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.