உள்ளூர் செய்திகள்

நீட் பாதிப்பை ஆராய குழு அமைப்பு எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்ய மனு

சென்னை: மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, &'நீட்&' தேர்வின் பாதிப்புகளை ஆராய அமைக்கப்பட்ட, ஓய்வு நீதிபதி தலைமையிலான குழுவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் குழுவை, தமிழக அரசு நியமித்துள்ளது. இந்தக் குழு, பொது மக்களிடம் இருந்து கருத்துக்களை கோரியது.அறிக்கைஇந்நிலையில், நீதிபதி குழு அமைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், விசாரணை நடவடிக்கைக்கு தடை கோரியும், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் கரு.நாகராஜன் மனு தாக்கல் செய்தார். இம்மனு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 5ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.இந்த வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, மாணவி நந்தினி என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். மனுவில், &'ஓய்வு பெற்ற நீதிபதி குழு, அரசிடம் அறிக்கை அளிக்க உள்ளது. &'இதில், யாருடைய உரிமையும் பாதிக்கப்படுவதில்லை. அரசியல் உள்நோக்கத்துடன், வழக்கு தொடரப்பட்டுள்ளது&' என, கூறப்பட்டுள்ளது.மனு குறித்து, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையிட்டார். திங்கள் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்