அரசு திட்டங்களை பெற பள்ளிகளில் சிறப்பு முகாம்; கலெக்டர் சங்கீதா தகவல்
மதுரை: மாணவர்களுக்கான நலத்திட்டங்களை பெற இந்தாண்டு முழுவதும் மதுரை மாவட்ட அரசுப் பள்ளிகளில் கல்வித்துறை, வருவாய்த் துறையின் சிறப்பு முகாம் நடத்தப்படும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்தார்.பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஊமச்சிக்குளம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் நோட்டுப் புத்தகங்களை வழங்கி அஞ்சல் வங்கி சேவை, ஆதார் பதிவு முகாமை தொடங்கி வைத்தார்.அவர் பேசியதாவது: முதல்வரின் காலை உணவு, நான் முதல்வன், உயர்கல்வியை ஊக்குவிக்கும் புதுமைப் பெண் போன்ற திட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.சிரமமின்றி கல்வி கடனுதவி பெறும் நோக்கத்தில் அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கி ஆதார் எண் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.மொத்தமுள்ள 2,161 அரசுப் பள்ளிகளில் ஆண்டு முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.