உள்ளூர் செய்திகள்

உலக ஆங்கில மொழி திறன் அறியும் போட்டியில் ராஜபாளையம் பள்ளி மாணவி 8ம் இடம்

விருதுநகர்: உலக அளவில் நடந்த ஆங்கில மொழி திறன் அறியும் போட்டியில் ராஜபாளையம் ஸ்ரீ ரமண பள்ளி மாணவி எட்டாம் இடம் பிடித்துள்ளார். வேர்ட்ஸ்ஒர்த் இன்டர்நேஷனல் ஸ்பெல்லிங் பி நிறுவனம், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி வளர்ச்சித் திறனை அறியும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா மாண்டிசோரி பதின்ம மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பத்மப்பிரியா, மதுரையில் மாவட்ட போட்டி, கேரளா காலிகட்டில் மாநில போட்டி,சேலம் வி.எம்.கே.வி., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த உலக நாடுகளின் அளவிலான போட்டியிலும் வெற்றிபெற்று எட்டாம் இடம் பிடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்