உள்ளூர் செய்திகள்

தனியார் பல்கலைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: அகில இந்திய அமைப்பு தலைவர் வரவேற்பு

கோவை காருண்யா பல்கலையில் நேற்று துவங்கிய தெற்கு மண்டல பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் அகில இந்திய பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் பூரி பேசியதாவது: நம் நாட்டில், மொத்தம் 661 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், தனியார் பல்கலைகள் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஒரு கோடியே 69 லட்சம்பேர் தற்போது உயர்கல்வி கற்கின்றனர். நம் நாட்டில் உயர்கல்வி கற்பவர்களில் பலர், வேலைவாய்ப்பு பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு கல்விமுறையில் மாற்றம் கொண்டு வரப்படாததே காரணம். இளநிலை பட்ட படிப்பின் போதே, வெளிநாடுகளில் உள்ளதை போல, வேலைவாய்ப்பு சார்ந்த இதர பாடங்களையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை மேம்பாடுக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உயர்கல்வித்துறை கற்கும் மாணவர்களில் பலர், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் அடிப்படை கூட தெரியாமல் உள்ளனர். நாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாநில அரசுகள் சரிவர நடவடிக்கை மேற்கொள்ளாதது, ஆசிய அளவில் சிறந்த 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியா பின்தங்கியுள்ள காரணம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளாதது உள்ளிட்டவை உயர்கல்வித்துறையில் இந்தியா பின்தங்கியுள்ளதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இவ்வாறு, பூரி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்