உள்ளூர் செய்திகள்

தினமலர் - பட்டம் போட்டி: அசத்திய மாணவ, மாணவியர்

மேட்டுப்பாளையம்: தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் நடந்த, பதில் சொல்; அமெரிக்கா செல் என்ற மெகா வினாடி- வினா போட்டியில், மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கேள்விகளுக்கான பதில்களை அளித்தனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி பள்ளி மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்கு நேரில் செல்லும் வாய்ப்பை வழங்கும் வகையில், தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் சார்பில் மெகா வினாடி- வினா போட்டி 2018 முதல் நடத்தப்படுகிறது.இந்த ஆண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150 பள்ளிகளில் நடக்கிறது. இப்போட்டிகளை, கோலோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜென்சி இணைந்து வழங்குகிறது.புஜங்கனுாரில் உள்ள, ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ.,பள்ளியில் நடந்த தகுதி சுற்றுக்கான பொது அறிவு போட்டியில், 180 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். கால் இறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி, மூன்று பிரிவுளாக நடந்தது.இதில் சி அணியை சேர்ந்த மாணவர் முறையே எட்டாம் வகுப்பு திகந்த் மற்றும் ஷஸ்வின் ஆகியோர் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று, அரை இறுதி போட்டிக்கு முன்னேறினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் சோமசுந்தரம், முதல்வர் சார்லின் இம்மானுவேல், துணை முதல்வர் சுமதி, நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி, ஆசிரியர்கள் சியாமலதா, வினோதினி, குமார், தேவிகா, பங்கஜம் உள்ளிட்டோர் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.கரும்புக்கடை ஜீவன்ஸ் பள்ளி: இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்று பொது அறிவு தேர்வு போட்டியில், 110 பேர் பங்கேற்றனர். தேர்வான, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். காலிறுதி மூன்று பிரிவுகளாக நடந்தது. இதில், எச் அணியின் ஷிபா, தக் ஷா (ஒன்பதாம் வகுப்பு) ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி செயலாளரும், முதல்வருமான சிவக்குமரன் சான்றிதழ் வழங்கினார்.உதவி தாளாளர் முஹமது தமீம், நிர்வாக அலுவலர் முஹமது ரியாஜுதீன், ஆலோசகர் முஹமது ரஷீத், கல்வி ஒருங்கிணைப்பாளர் அஸ்மா பிர்தவுஸ், கூடுதல் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமா பானு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்