உள்ளூர் செய்திகள்

பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்துக்கு மத்திய அரசின் இன பாதுகாப்பு விருது

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா, பர்கூரில் உள்ள பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்துக்கு, தேசிய அளவிலான இன பாதுகாப்பு விருதை, மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகம் சார்பில், பர்கூர் இன மாடுகளை காக்கும் வகையில், ஆராய்ச்சி மையத்தை பர்கூர் மலை கிராமம், துருசனாம்பாளையத்தில், 2015ல், அமைக்கப்பட்டது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளன. இம்மையத்துக்கு இந்தாண்டுக்கான தேசிய அளவிலான இன பாதுகாப்பு விருதை, மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.ஹரியானா மாநிலம், கர்னாலில் நடந்த தேசிய விவசாய ஆராய்ச்சி கழகம் மற்றும் தேசிய விலங்கின மரபுவள வாரியம் சார்பிலான விழாவில், தேசிய விலங்கின மரபுவள வாரிய இயக்குனர் மிஸ்ரா, வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனர் கவுர் ஆகியோர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழக உற்பத்தி கல்வி மைய இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தர் மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் கணபதி ஆகியோரிடம் விருதை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்