உள்ளூர் செய்திகள்

இஸ்ரோ விண்வெளி மையத்தில் திரவ ராக்கெட் வெப்ப சோதனை வெற்றி

திருநெல்வேலி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ கடந்த மே 9ல் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் திரவ ராக்கெட் இயந்திர வெப்ப சோதனையை மேற்கொண்டது.ஏ.எம். தொழில்நுட்பத்தின் படி 665 வினாடிகளுக்கு வெற்றிகரமாக செயல்பட்டு குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியது. புதிய இயந்திரம் 97 சதவீத மூலப்பொருட்களை மிச்சப்படுத்துகிறது. உற்பத்தி நேரத்தையும் 60 சதவீதம் குறைக்கிறது.பாரம்பரியமாக தயாரிக்கப்படும் பிஎஸ் 4 இன்ஜின், பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டின் நான்காவது கட்டத்தை 7.33 கே.என்.வெற்றிட உந்துதல் மூலம் இயக்குவதில் முக்கியமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.பி.எஸ்.எல்.வி.,யின் முதல் கட்டத்தின் (பிஎஸ்1) எதிர்வினைக் கட்டுப்பாட்டு அமைப்பிலும் இந்த ராக்கெட் இன்ஜின் பயனுள்ளதாக இருக்கும் என இஸ்ரோ மையம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்