நூறு மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; அன்னூர் பள்ளியில்தான் இந்த கூத்து!
அன்னூர்: ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் பல பள்ளிகளில், 100 மாணவர்களுக்கு ஒரே ஒரு ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபட்டார்.பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டிட்டோ ஜாக்), நேற்று முன் தினம் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது.அன்னூர் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப்பள்ளிகள் என 91 பள்ளிகள் உள்ளன. 252 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 201 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 51 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோர், ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இதையடுத்து, அனைத்து பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. ஆனால் பல பள்ளிகளில், ஒரே ஆசிரியர், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள, 100 மாணவர்களுக்கு கற்பித்தார்.நடுநிலைப்பள்ளிகளில், 150 மாணவர்களுக்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டு ஆசிரியர்கள் மட்டும் கற்பித்தனர். பள்ளி பெயரளவுக்கு திறக்கப்பட்டாலும், கற்பித்தல் பணி நடைபெறவில்லை.மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிடும், ஆசிரியர்களை இப்படி அலையவிட்டு வேடிக்கை பார்க்காமல், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மாணவர்களின் எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிடும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நடுநிலைப்பள்ளிகளில், 150 மாணவர்களுக்கு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இரண்டு ஆசிரியர்கள் மட்டும் கற்பித்தனர். பள்ளி பெயரளவுக்கு திறக்கப்பட்டாலும், கற்பித்தல் பணி நடைபெறவில்லை.