இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; விண்வெளி திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சந்திரயான் -4, வெள்ளி கிரகம் ஆய்வு, சர்வதேச விண்வெளி மையம் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.2023ம் ஆண்டு ஜூலை 14ல் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி திறன்களை கண்டு உலக நாடுகள் வியந்தன. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான்-4, ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களை இஸ்ரோ விரைவுபடுத்தி உள்ளது.இஸ்ரோவின் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.* நிலவில் இருந்து மண், பாறை எடுத்து வரும் சந்திரயான்4 திட்டத்தை ரூ.2,104 கோடி செலவில் செயல்படுத்தவும்*2028ம் ஆண்டு வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய ரூ.1,236 கோடி ஒதுக்கவும்*ரூ.20,139 கோடி செலவில் விண்வெளி மையம் அமைக்கவும், விண்வெளி துறை சார்ந்த பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.நம்பிக்கைசந்திரயான் -4 திட்டம் தொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது: சந்திரயான் -4 திட்டத்தில் நவீன தொழில்நுட்பம் மூலம் நிலவுக்கு சென்று அங்கிருந்து திரும்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சந்திரயான்-3 மூலம், நிலவில் தரையிறங்கி விட்டோம். 2040க்குள் பிரதமரின் கொள்கைப்படி, விண்வெளிக்கு மனிதனை அனுப்ப வேண்டுமானால், நம் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை வேண்டும். இந்தியா சார்பில் 2035ம் ஆண்டிற்குள் விண்வெளி மையம் அமைக்கப்படும். இதற்கான முதல் விண்கலம் 2028ம் ஆண்டிற்குள் விண்ணில் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இஸ்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு பச்சைக்கொடி; விண்வெளி திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்